பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

பன்னிரு திருமுறை வரலாறு


" ஆண்ட குருவைப் பிரியா தணைந்துபணி புரிந்துமிகும் அன்போ டின்பம் பூண்டு கிடக்கப் பெறுவ தென்று கொலோ எனும் விருப்பம் புணர்ச்சிப் பத்தாம் ' எனத் திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர் இதன் பொரு ளமைதியைக் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தக்கதாகும். இப்பதிகத்திற்கு அத்துவித இலக்கணம் , அஃதாவது ஒன்று மல்ல இரண்டு மல்ல என்றல் என முன்னேர் கருத் துரை வரைந்தனர். ஆன்மாவும் சிவனும் ஒரு பொருளா கில் ஆன்மா சிவத்துடன் கூட வேண்டியதில்லை. பொருள்

હ 發 -: 孩 o ஒன்று என்ற நிலையிற் பெறுவானும் பேறும் இல்லை. ஆன்மா வேறு சிவம் வேறு என இரண்டாய் நிற்கும் என்று சொல்லின், அந்நிலையைச் சாயுச்சியம் என்று சொல்லுதற்கு இடமில்லை. எனவே பொருட்டன்மையால் வேருகிய ஆன்மாவும் சிவமும் கலப்பினுல் ஒன்ருய்ப் பிரிவுறக் கலந்து ஒன்றியுடனுகும் நிலேயே அத்துவிதம் எனப்படும் என்பர் சைவ சித்தாந்திகள்.

இப்பதிகத்தில், விரையார் மலர் தூவிப் பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே" (3) எனவும், சொல்லும் பொருளும் இறந்த சுடரை....... புல்லிப் புணர்வதென்று கொல்லோ என் பொல்லா மணி யைப் புணர்ந்தே (4) எனவும், இவ்வாறு ஆன்ம போதம் அடங்கி, அவனே தானேயாகிய அந்நெறி ஏகளுகி நிற்கும் அத்துவித இயல்பினைத் திருவாதவூரடிகள் தமது அருளணு பவத்தால் இத்திருப்பதிகத்தில் இனிது விளங்க அருளிச் செய்திருத்தல் கூர்ந்துணரத் தக்கதாகும்.

அல்லிக் கமலத்தயனும் மாலும்

அல்லாதவரும் அமரர் கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத்தானைச்

ச்ொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கணியைத் தேனைப் பாலை

நிறையின் னமுதை அ.மு.தின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்று கொல்லோ என்

பொல்லா மணியைப் புணர்ந்தே 14

\

.# எனவரும் திருப்பாடலில், தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தரும் இறைவனை நெல்லிக்கனி, தேன், பால், அமுது முதலிய இன்சுவைப் பொருளாக அடிகள் குறித்துப் போற்றியுள்

ளார். ஈண்டு நெல்லிக்கனி என்றது, ஒளவையுண்ட