பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் #89

நெல்லிக்கனி போன்று அமிழ்தாம் நிலையில் உள்ள சிறந்

ఢీ...? 1 : : --- هي إيمير ينهي : : : ...- Á... - f 锚* கணியினை, அங்கை @ನಿಖಟ್ಟ பழத்திடையமுதே' (7.54-3) என நம்பியாரூரர் இறைவனைப் போற்றியுள்ளமையும்

$

இரும்பைக் காந்தம் வலித்தாற் போலியைத் தங்குயிரை

எரியிரும்பைச் செய்வதுபோல் இவனத்தாளுக்கி

கரும்பைத் தேனைப்பாலேக் கனியமுதைக் கண்டைக்

கட்டியை ஒத் திருப்பன் அந்த முத்தியினிற் கலந்தே ”

(சித்தியார் சுபக்கம் -321) ஒ'இT அருணந்தி சிவளுர், இறைவன் உயிரின்கண் கலந்த வழி இவ் வியல்பிற்றெனப் பிரித்தறியவாராது ஆனந்த சொரூபமாய் நிற்கும் இயல்பினே விரித்துரைத்தமையும் இங்குச் சிந்தித்தற்குரியனவாகும்.

உஅ வாழாப் பத்து

இறைவனுகிய நினது பற்றினையன்றி இவ்வுலகப் பொருள்களிற் சிறிதும் பற்றுடையேன் அல்லேன் ; உலக வாழ்க்கையிற் சிக்குண்டு மேலும் வாழ்தற்கு விரும்புகின்றி லேன் , எளியேனை நின்பால் வருக என அழைத்தருளி நின் திருவடி நீழலிற் கூட்டி அருள்புரிவாயாக என இறை வனை வேண்டி அழுதரற்றி முறையிடும் நிலையில் திருவாத வூரடிகளால் அருளிச் செய்யப்பெற்றது, வாழாப் பத்து என்னும் இப்பனுவலாகும். உலக வாழ்க்கையில் உளவா கும் இன்னல்களே யெண்ணி இவ் வாழ்க்கையில் யான் வாழ்கிலேன் என வாழ்வினை வெறுத்துரைக்கும் முறையில் அமைந்தமையின், இது வாழாப் பத்து என்னும் பெயர்த்தா யிற்று. வாழாப் பத்து - வாழ விரும்பாமையைப் புலப்படுத் தும் பத்துப் பாடல்களால் இயன்ற பனுவல்.

நீண்ட வுலகத்தினிற் பற்ருென்றிலேன் இவ்வுடற்கண்

நின்று வாழேன் மாண்டகு நின் பதநிழற்கீழ் வருக வருள் புரியெனுஞ் சொல்

வாழாப் பத்தே ’ என்பது திருப்பெருந்துறைப் புராணம். இத்திருப்பதிகப் பாடல் தோறும், " திருப்பெருந்துறையுறை சிவனே! பற்று நான்மற்றிலேன் கண்டாய், உலகில் வாழ்கிலேன் கண்டாய், வருக என்று அருள் புரியாயே என இறைவனை நோக்கி அடிகள் முறையிடுதல் காணலாம்.