பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

பன்னிரு திருமுறை வரலாறு


இங்ங்னம் உலக வாழ்க்கையிற் பற்றின்றிப் பற்றற்ருன் திருவடிகளையே தஞ்சமெனப் பற்றி எல்லாப் பற்றுக்களையும் விட்டொழித்த நிலையில் வீடுபேருகிய பேரின் பநிலை தானே வந்தெய்தல் உறுதியாதலின் அடிகளது பற்றறுதியினைப் புலப்படுத்தும் இத்திருப்பதிகத்திற்கு, முத்தியுபாயம் - பிர பஞ்சத்தை விட்டுப் பரயோகத்தைக் கூடுதற்கு உபாயம் என முன்ளுேர் கருத்துரைப்பாராயினர்.

உகூ. அருட் பத்து

இறைவனது திருவருளே வேண்டிப் போற்றிய பத்துப் பாடல்களையுடைய பதிகமாதலின் அருட்பத்து என்னும் பெயருடையதாயிற்று. திருப்பெருந்துறையிற் குருந்தமர நீழலில் குருவாக எழுந்தருளி வந்து தம்மை ஆண்டருளிய பெருமானை நோக்கிச் சோதியே சுடரே, சூழொளி விளக்கே, ஆதியே என அன்பினுல் அழைத்து அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே" எனப் பாடல் தோறும் இறைவனது அருளை வேண்டிப் பரவிப் போற்றியுள்ளமை காணலாம்.

' சோதியே சுடர் விளக்கே துயர்ப் பிறவிக்

கடல் விடுத்துன் நற்ருள் சேர் தற்கு ஆதியே ஆதரித்திங் குனேயழைத்தால் அ தெந்துவெனக்

கேளெனுஞ்சொல் அருட்பத்தாகும் " என்பது திருப்பெருந்துறைப் புராணம். திருப்பகத்திற் பாடல் தோறும் பயின்ற அதெந்துவே ' என்ற திசைச் சொல்லுக்கு மலையாள மொழியில் அது என்ன என்ற பொருளும் கன்னட மொழியில் அஞ்சாதே’ என்ற பொரு ளும் வழங்கும் என்பர்.

ஒரு பற்றுக்கோடும் இன்றி அல்லலுறும் அடியேனே நோக்கி ஆண்டவளுகிய நீ வருந்துதல் எதற்கு, அஞ் சாதே" என ஆறுதல் மொழி பகர்ந்து அருள் புரிவாயாக எனத் திருவாதவூரடிகள் திருப்பெருந்துறை யிறைவனது திருவருளை வேண்டிப் பரவிப் போற்றும் நிலையில் இப்பதிகப் பாடல்கள் அமைந்துள்ளன.

இறைவனது திருவருளையே வேண்டித் தம்முடைய கருவி கரணங்களுக்கு இடமாய மாமாயையைத் தூய்மை செய்து கொள்ளும் முறையில் அடிகளால் அருளிச் செய்யப் பெற்றது இப்பதிகமாதலின், இதற்கு 'மகாமாயா சுத்தி