பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

பன்னிரு திருமுறை வரலாறு


நீதிமறை பரவு திருப்பெருந்துறையிற்

குருவடிவாய் நிகழ்ந்த கோலம்

காதலொடுங் காட்டினேயே யெனுங்களிப்புப்

பகர்தல் திருக்கழுக்குன் ருமே

எனவரும் திருப்பெருந்துறைப் புராணத்தாலும், இப் பதிகப் பாடல் தோறும் பெருந்துறைப் பெருமான முன்னிலையாக்கி, திருக்கோலம் நீ வந்து காட்டிஞய் கழுக்குன்றிலே ' என வாதவூரடிகள் மனம் நைந்துருகிப் போற்றுதலானும் இனிது புலனும். இப்பதிகம் ஏழு திருப் பாடல்களையுடையதாகும். அடிகள் தமக்கு அருள் சுரந்த குருவின் திருக்கோலத்தைத் தரிசித்த நிலையிற் பாடிய பதிகமாதலின் இதற்குக் குரு தரிசனம் - பசுத்துவம் கெட்ட இடம் என முன்னேர் கருத்துரைத்தனர்.

காய்ந்து உலர்தல் இல்லாத நிலையில் உயிரோடு ஒற்றித்துள்ள ஆணவமலமாகிய விதை, மேல் விளை வெய்தித் துன்பங்களைப் பெருக்காதவாறு வறுத்த வித்துப் போல் ஆற்றல் குன்றியடங்க, இருவினை ஒப்பு எய்த, இறைவன் தம்மை ஆட்கொண்டருளிய செய்தியை,

" பிணக்கிலாத பெருந்துறைப் பெருமானுன் நாமங்கள்

பேசுவார்க் கிணக்கிலாததோர் இன்பமேவரும் , துன்பமே துடைத்

தெம்பிரான் உனக்கிலாததோர் வித்து மேல்விளையாமல் என்வினை

ஒத்தபின் கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினுய்

கழுக்குன்றிலே ' (1)

எனவரும் திருப்பாடலில் அடிகள் எடுத்துரைத்துப் போற்றி யுள்ளார். இப்பாடலில் உனக்கிலாததோர் வித்து ' என்றது, காய்ந்து உலர்தல் இல்லாத நிலையில் உயிர்களுடன் ஒற்றித்துள்ள ஆணவ மலமாகிய விதையின. மேல் விளையாமல் வினை ஒத்தலாவது, ஆணவமாகிய அவ்விதை, வறுத்த வித்துப்போல் முளைக்கும் ஆற்றல் கெட்டு அடங்க, உயிர் இன்ப துன்பங்களை ஒன்ருக ஏற்று நுகரும் இருவினை யொப்பு அடையப் பெறுதல்.

சிவபெருமான் மதுரையில் தன்னை அன்பினுல் வழி பட்டுப் பரவிய வந்தியென்னும் செம்மனச் செல்வியின் பொருட்டு அவ்வம்மையார் தந்த பிட்டினைக் கூலியாகப்