பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 195

இதன் கண், 'ஆர்வங்கூர அடியேற்கே அருள்செய்யாய்” எனவும், கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக்கடல் பொங்க, உடையாய் அடியேன் உள்ளத்தே ஒவாதுருக அருளாயே எனவும், மெய்யன்பைப் பெற வேண்டும் ' எனவும், பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் எனவும், ஊனே புகுந்த உனையுணர்ந்தே உரு கிப்பெருகும் உள்ளத்தைக் கோனே அருளுங்காலந்தான் கூடுதல் வேண்டும் எனவும், உடையாயொடுகலந்து உள்ளுருகிப்பெருகி நெக்கு ஆடியா டி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்து ஒன்றியின்புறும் நிலை வேண்டும் எனவும் திருவாதவூரடிகள் இறைவனேப் பிரார்த்தித்துப் போற்றியுள்ளமை காணலாம். இப்பதிகம் திருப்பெருந் துறையில் அருளிச்செய்யப் பெற்றதாகும். இதற்குச் சதாமுத்தி - ஆன்மாக்களுக்கு முத்தி நிச்சயம் பண்ணுதல் என முன்னேர் கருத்துரை வரைந்துள்ளனர்.

ங்ங் குழைத்த பத்து

பண்டைக் கொடுவினை நோய்கள் தம்மைத் தொடர்ந்து வருத்தும் இன்னலுக்கு ஆற்ருது வருந்திய வாதவூரடிகள், அத்துன்பங்களுக்குக் காரணமாகத் தாம் செய்த பிழைகளை நினைந்திரங்கி இறைவனது கருனைத்திறத்தினையே தாம் உய்தி பெறுதற்குரிய சார்பாகக்கொண்டு இறைவனை நோக்கி மனம் நைந்து அரற்றிக்கூறும் முறையீடாக அமைந்தது, ' குழைத்தடத்து என்னும் இப்பதிகமாகும்.

இழைத்தேன் இவ் ஆக்கை பொறுத் திணிக்கணமும்

பொறுக்ககிலேன் ஏழையேனைக் குழைப்பதேன் பிழைபொறுத்தாள் என இரங்கிக்

கூறுதலே குழைத்த பத்தாம் ”

என்பது திருப்பெருந்துறைப் புராணம். இறைவனே ஆசிரியனுகத் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தருள லால் இருவகைப் பாசங்களுந் தீர்ந்து நற்பொருளைக் கேட்கும் முறையிற் கேட்டுச் சிந்திக்கும் முறையிற் சிந்தித்து ஆசிரியன் பாற் பேரன்புடையராய் ஆன்மபோதம் அடங்கப் பெற்ற வாதவூரடிகள், ஒன்றினும் தோய்வற . நிற்கும் இறைவனுகிய முதற்பொருளோடு ஒற்றித்து நின்று கூடாதே வாடாதே குழைந்திருப்பதான பேரன்பில் திளைத்திருக்கும் இயல்பினைப் புலப்படுத்தும் நிலையில்