பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 139

தேவர் ? என ஏனைத் தெய்வங்களையெல்லாம் அருவருத் தொதுக்கவல்ல உள்ளத்தெளிவில்லாதவர்களும், இறைவனை ஏத்தி இனிது அருள்பருகமாட்டாதாராகிய அன்பில்லாதவர் களும், இறைவன் திருப்பாதங்களைப் பாவித் துளியுலாங் கண்ணராகித் தொழுது அழுது உள்ளம்நெக்கு இங்கு அளியிலாதவர்களும், திருவெண்ணி து அணிகிலாதவர்களும், திருவடிக்கு மலர்மாலை புனைந்து ஆட்படாதவர்களும், முன்னவன் பாதம்ஏத்தி அகம்நெகாதவர்களும், செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்து இனிது இருக்கமாட்டாத அறிவிலி களும், திரிபுண்டரம் அணிய அஞ்சுகின்றவர்களும், நினைந்து நைந்து உருகி நெக்குக் கண்கள் நீர்சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டாத ஆணலாதவர்களும் ஆகியவர்களைக் கண்டால் ஐயோ பெரிதும் அஞ்சுகின்ருேம் ' என அடிகள் இத்திருப் பதிகப் பாடல்களில் அறிவுறுத்தியுள்ளார். உலக வாழ்க்கை யில் அஞ்சத்தக்க கொடியன எல்லாவற்றுள்ளும் இறைவன் பால் அன்பில்லாதவர்களே பெரிதும் அஞ்சி விலகத்தக்க கொடுமையுடையர் என்பது திருவாதவூரடிகள் கருத்தாதல் இதனுற் புலனும். இக்கருத்து,

தரையில் வளர் வினே முழுதும் வரினு மஞ்சேன்

சிவசமயத் தவஞ் சாரா தார் அருகின் வரக் காண்கின்மனம் அஞ்சும் என

இகழ்ந்துரைத்தல் அச்சப்பத்தாம் '

எனவரும் திருப்பெருந்துறைப் புராணத்தால் இனிது புலப் படுத்தப் பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும்.

சிவானந்தம் உற்ருர்க்கன்றி இத்தகைய அஞ்சாமையும் அச்சமும் ஒருங்கு நிகழாவாகலின் இப்பதிகத்திற்கு 'ஆனந்த முறுத்ல்” என முன்னேர் கருத்துரை கூறினர்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் ' எனவரும் திருக்குறட்பொருளேத் தெளிவுறப் புலப்படுத்தும் முறையில் இப்பதிகத் திருப்பாடல்கள் அமைந்திருத்தல்

காணலாம்.

கூசு, திருப்பாண்டிப்பதிகம்

勢労

' தென்னவன் சேரலன் சோழன் ' என இவ்வாறு உலகபாலர் உருவாய்நின்று மன்னுயிர்களைக் காத்தருளுஞ் சிவபெருமான், தம்பொருட்டுப் பாண்டியன் தனக்குப் பரிமா