பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 爱登盘

ஞானப்பெரு வேட்கையால் மயங்கும் அருளறுபவத்தினை அடையப்பெறுவர் என்பதனைச் சார்ந்தவர் சதுரை மறந்து அறிமால் கொள்வர் ' என்றும் அடிகள் குறித்துள்ளார். செஞ்ஞாயிற்றையும் சிவபெருமான் திருமேனியையும் ஒரு காலத்து ஒருங்கே காண நேர்ந்தால், இறைவன் திரு மேனியை நோக்க ஒளிப்பிழம்பாகிய சூரியனும் இருள் என்று சொல்லும்படி பொலிவிழந்து மறைவன் என்பது புலப் படுத்துவார் கதிரை மறைத் தன்ன சோதி என்ருர். கதிர்சூரியன்.

இதன் நான்காந் திருப்பாடலில், தென்னன் நன்னுட்டு இறைவனுகிய சிவபெருமான், 'ஆனந்த மாக் கடவி, அறிவு ஒண்கதிர்வாள் உறைகழித்து, எதிர்ந்தார் இருநிலத்துப் புரள, பிறப்பை எறியும் என உருவக அணிநலம் தோன்றப் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பேரருள் நலத்தினை வியந்து போற்றியுள்ளார். எறிவது ஞானத்து உறைவாள் உருவி (திருமந்திரம். 2645) எனத் திருமூலதேவர் சிவஞானத்தினை வாட்படையாக உருவகஞ் செய்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

தன் திருவடிக்கண் அன்புசெய்யும் பாண்டிய மன்னனைப் பகைத்துவரும் பகைவனது படையை இறைவனே படைத் தலைவனுக எழுந்தருளித் தான் ஒருவனுகவே எதிரேற்றுத் தாக்கி வேந்தனுக்கு வெற்றி வழங்கிய செய்தியை ஓர் மீனவன் பால் ஏற்று வந்தார் உயிருண்ட திறல் ஒற்றைச் சேவகனே எனவரும் தொடரில் அடிகள் குறித்துப் போற்றியுள்ளமை அறியத்தக்கதாகும்.

ங் எ. பிடித்த பத்து

எல்லாத் தொடர்பையும் விடுத்து நின் திருவடிகளையே சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் என இறைவனைப் போற்றிப் பரவும் நிலையில் அடிகள் அருளிய திருப்பதிகம் பிடித்த பத்து என்பதாகும். மற்றைப் பற்றுக்களெல்லாம் அறவே நீங்குமாறு பற்றற்ருன்பற்றினை இறுகப்பற்றிய பேரானந்தமாகிய முத்தியின் பத்தினைப் புலப்படுத்தும் முறை யில் அமைந்தது இத்திருப்பதிகமாதலின், இதற்கு முத்திக் கலப் புரைத்தல் என முன்னேர் கருத்துரை வரைந் தனர்.