பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 263

மிகவும் கீழாகிய எளியேனுடைய இரும்புமணம் முதலிய இழிந்த கருவி கரணங்களையும் மிகவும் உயர்ந்தனவாகத் திருத்தித் தன் திருவடிக்கீழ் வைத்துப் பேரின்பம் அருளி ஞன் எனத் திருவாதவூரடிகள், தம் பொருட்டு எளிவந்தரு ளிய இறைவனது பெருங்கருணைத் திறத்தினை நினைந்து நினைந்து உள்ளங்குழைந்து இரங்கிப் போற்றும் நிலையில் அருளிய பனுவலாதலின், இது திருவேசறவு எனப் பெயர் பெறுவதாயிற்று. இச்செய்தி,

  • தக்கபரியாய் நரியை யாக்குதல்போல் எனே ப்பெரிய

தாக்கித் தாட்கீழ் அக்கணம் வைத்தனேயே யென் றிரங்கல் திரு

வேசறவென் றியம்பலா மே எனவரும் திருப்பெருந்துறைப் புராணத்தால் அறியப்படும். வேசறவு - மனங்குழைந்து இரங்குதல். இப்பொருளில் ஏ.சினும் யானுன்னே ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து, வேசறுவேனே (நீத்தல் விண்ணப்பம் - 50) என அடிகள் இச்சொல்லின ஆண்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கதாகும். இங்ங்னம் தம்பிழை நினைந்து இரங்கும் முறையில் அடிகள் அருளிய இப்பனுவல், ஆன்மா இறைவனது அருளின் வண்ணமாய் அடங்கித் தான் ஒன்றையும் சுட்டியறியாத நிலையினைப் புலப்படுத்தலால் இதற்குச் சுட்டறிவொழித்தல் - தன் செயலற நிற்றல் ' என முன்ஞேர் கருத்துரைத்தனர்.

இதன்கண், இறைவன், தமது இரும்பு மனத்தினையும் ஈர்த்து ஈர்த்து என்பும் உருகச் செய்து தன் கழலினைகளைக் காட்டிக் கரும்புதருசுவைக்ாட்டித் தமக்கு அருள்செய்த திறத் தினேயும், நரிகளை எல்லாம் தம்பொருட்டுக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த பெற்றியையும், நாய்க்குப் பொற்றவிசு இடுமாறு போன்று தமக்குப் பொன்னருள்சுரந்து அஞ்சேல் என்றருளி அகம்நெகவேபுகுந்து ஆட்கொண்டருளிய சீர்த்தியையும், தமக்குத் திருவைந்தெழுத்தினை உபதேசித்தருளித் தானே உள்ளம்புகுந்து தேளுய் இன்னமுதமுமாய்த் தித்தித்தருளிய திறத்தினையும் திருவாதவூரடிகள் இத்திருப்பதிகப் பாடல் களில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளமை அன்பினுல் ஒதி மகிழ்தற்குரியதாகும்.

" நானேயே தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்

தேனுயின் னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானே வந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான் ஊருைம் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே '