பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பன்னிரு திருமுறை வரலாறு


களேயும் காணப்பெருத வாதவூரடிகள், அளவிலாத்துயருற்று அழுதரற்றினர். தம்மை ஆட்கொண்டருளிய குருமணியை நினைந்து கண்ணிர் ஆருய்ப்பெருகக் கோயிற்பத்து, புணர்ச்சிப்பத்து, செத்திலாப்பத்து, பிரார்த்தனைப்பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப்பத்து, திருப்புலம்பல், வாழாப் பத்து, எண்ணப்பத்து ஆகிய திருவாசகப்பனுவல்களை நெஞ்சம் நெக்குருகிப்பாடிப் போற்றினர். பின்பு பெருந் துறையாகிய அந்நகரத்தினுள்ளே சென்று அங்கு நிகழும் விளையாடல்களைக் கண்ணுற்று அம்மானை, பொற்சுண்ணம் கோத்தும்பி, தெள்ளேனம், பூவல்லி, உந்தி, தோணுேக்கம் (திருவெம்) பாவை, சதகம் ஆகிய பனுவல்களை ஓதினர்.

இங்ங்னம் திருவாதவூரடிகள் இறைவனது திருவருட் டிறத்தை யெண்ணி அப்பெருமானது பிரிவில்ை உள்ளம் வருந்தி ஊணுறக்கமின்றித் திருவாசகம் ஒதக்கேட்ட தொண்டர்கள், அதிசயித்துத் தேனினுமினிய இத்திருப் பாடல்கள் நாம் முன்பு கேட்டன அல்ல ; புதியனவாக வுள்ளன என அடிகளைச் சூழ்ந்து பாராட்டிப் போற்றி ஞர்கள். அடிகள் தாம் குதிரைத் திரள் வாங்குதற்கெனக் கொண்டு வந்த பொருளனைத்தையும் பின்வரும் காரியத்தை நோக்காது அடியார்களுக்கு வாரி வழங்கினர். சிறிது நாளிற் பொருளனைத்தும் செலவாயிற்று.

இங்ங்னம் வாதவூரர் கொண்டு சென்ற பொருளனைத் தும் செலவழிந்த செய்தியையறிந்த ஏனைய அமைச்சர்கள், பாண்டியனிடத்திற் சென்று தெரிவித்தனர். அஃதுணர்ந்த அரசன் பெரிதும் சினமுற்ருன். தென்னவன் எழுதும் ஒலை; தென்னவன் பிரமராயன் காண்க. என் பொன்னறையி லிருந்து பெரும் பொருளே வாரிக்கொண்டு குதிரைத்திரள் வாங்கிவருவதாகக் கூறிச்சென்றவன் இன்னம் வாராமலிருப் பது எது கருதி ? அமைச்சனுக்கு இஃது அழகாகுமோ ? உடனே குதிரைகளைக் கொண்டு விரைவில் வருக என ஒலையொன்றெழுதி, அதனைத் துரதர்கையிற் கொடுத்தனுப் பிஞன். அரசனுல் அனுப்பப்பட்ட தூதர், பெருந்துறையை யடைந்து ஒலையை வாதவூரர்க்குக் காட்டினர். அவ்வோலை யைக் கண்ட அளவில் அரசனது கருத்துணர்ந்த வாதவூரடி கள் மனக்கலக்கமுற்ருர். பாண்டியனுடைய அமைச்சனுகிய யான் குதிரை வாங்குதற்கெனக் கொணர்ந்த பொருளெல்லா வற்றையும் என் விருப்பப்படி செலவழித்து விட்டேன்,