பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் திருப்பாடல் திருவைந்தெழுத்து ஒது முறையினை இனிது விளக்கி நிற்றல் அறியத்தக்கதாகும்,

க.கூ. திருப்புலம்பல்

புலம்பல் - தனிமையுற்று வருந்துதல். உயிர்களுக்கு இறைவனையன்றித் துணையாவார் பிறர் இலர் எனத் தெளிந் துணர்ந்த திருவாதவூரடிகள், தமக்குக் குருவாய் வந்தருளிய அம் முதல்வனைப் பிரிந்துறைய நேர்ந்த தமது தனிமை நிலைக்கு மிகவும் வருந்தி, தான் ஈன்ற இளங்கன்றினைப் பிரிந்து கதறியழைக்கும் தாய்ப் பசுவின் பேரன்பினையொத்த பேரன்பினை அடியேற்கு அருள்புரிவாயாக’ என இறைவனே இரந்து வேண்டும்நிலையில் அருளிய பனுவலாதலின், இது திருப்புலம்பல் என்னும் பெயர்த்தாயிற்று.

கரைந்துருகும் பேரன் புன் கழலிணைக்கே

கற்ருவின் மனம் போலென்றும் திருந்தும்வகை யெனக்கருள்க எனக்கேட்டல்

திருப்புலம்பலாகும்

எனவரும் திருபெருந்துறைப் புராணத்தொடர், இதன் பொருளமைதியினைப் புலப்படுத்துவதாகும். இது மூன்று திருப்பாடல்களை உடையது. இப்பனுவல் திருவாரூரில் அருளிச்செய்யப் பெற்றதென்பர். இச்செய்தியினை இதன் முதற் பாடலில், ஒங்கெயில் சூழ் திருவாரூ ருடையானே என அடிகள் திருவாரூர்ப்பெருமானை முன்னிலையாக்கிப் போற்றுங் குறிப்பில்ை உய்த்துணரலாம். இதற்குச் சிவா னந்த முதிர்வு - சிவானந்தம் பெருவிச்சை' என முன்ஞேர் கருத்துரை வரைந்தனர்.

உற்ருரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன்

பேர் வேண்டேன் கற்ருரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்ருலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே எனவரும் மூன்றுந் திருப்பாடல், திருவாதவூரடிகள் உற்ருர் ஊரார், கற்ருர், புகழ், கல்வி முதலிய உலகியல் தொடர்புகளை அறவே விலக்கி இறைவன் திருவடிக்கே நெக்கு நெக்குக் கசிந்துருகும் நேயமலிந்த நெஞ்சத்தினராக விளங்கிய திறத் தினை இனிது விளக்கும் அநுபவ மொழியாகத் திகழ்தல் அறிந்து இன்புறற்பாலதாகும்.