பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம்

தாண்டவராயர் மேற்காட்டிய தொடர்க்குப் பொருள் கூறி யிருத்தலும்,

துாய அருட்பதத்து அருமை ............ அடியரொடும் வியந்துரைத்தல் சென் னிப்பத்தே எனத் திருப்பெருந்துறைப் புராணம் சுட்டிய பதிகக் கருத் தும் இங்கு நோக்கத் தக்கனவாகும். இதன் ஐந்தாந் திருப் பாடலில், திருப்பெருந்துறை மேவின்ை, காயத்துள் அமுது ஊற ஊற நீ கண்டுகொள் என்று காட்டிய துாய மாமலர்ச் சேவடிக்கணம் ' என்றது, திருப்பெருந்துறை யிறைவன் குருவாக எழுந்தருளி வந்து அடிகளுக்கு உப தேசித்தருளிய திருவடி ஞானத்தை. ஆன்மாவாகிய சரீரத் துக்குள்ளே உயிராயிருக்கப் பெற்ற சிவஞானமாகிய தேனினைச் சொரியும் திருவடிப் பேரின்ப அநுபவத்தினை, காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண் ண மாட்டாதே மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற வரட்டுப் பசுக்களென் றுந்தீபற (43) எனவரும் திருவுந்தியார் பாடலில் உய்யவந்த தேவநாயனர் வெளியிட்டுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்க தாகும்.

நங்கைமீர் என நோக்குமின் எனத் தொடங்கும் மூன்ருந் திருப்பாடலில் அடிகள் தம்மை இறைவனுகிய ஆன்ம நாயகனைக் காதலித்த மகளிர் நிலையில் வைத்துக் கூறியுள்ளார்.

சங். திரு வார்த்தை

சிவபெருமான் பெருந்துறையிற் குருவாக எழுந்தருளி முழுமுதற் பொருளாகிய தன் உண்மையினை வெளிப்படுத்தி யருளியது முதலாகத் தன் சீரடியார்களுக்கு அருளிய திறங் களாகிய புகழ்ச் செயல்களைப் போற்றிப் பரவும் பொருளுரை யாக அமைந்தது, திருவார்த்தை என்னும் இத் திருப்பதிக மாகும். இறைவன் தன் அடியார் பொருட்டு எளிவந்தரு ளிய செயல்களைக் குறிக்கும் இப்புகழுரைகளை அறிந்து போற்றும் அடியார்கள் எம்பிரான் ஆவார் எனத் திருவாத வூரடிகள் இப்பதிகப் பாடல் தோறும் உளமுருகிப் போற்றி

யுள்ளமை காணலாம்.

14