பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

பன்னிரு திருமுறை வரலாறு


  • அறம் பெருகும் பெருந்துறையிற் றமையாண்ட

செயல்முதலா அரன்சீ ராட்டின் திறமறிவார் எம்பிராளுவரென வுரைத்தல் திரு

வார்த்தை யாகும்" என்பது திருப்பெருந்துறைப் புராணம்.

மணிவாசகப் பெருமான், தாம் அருளிய திருவாசகத்தில் " வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி (30) எனவும், "வார்த்தையும் பேசி" (166) எனவும், "என்னை ஓர் வார்த்தை யுட்படுத்துப் பற்றிய்ை” (399) எனவும், வார்த்தை என்னும் சொல்லை இறைவனது பொருள் சேர் புகழ் என்ற பொருளிலும், இறைவன் அருளிய உபதேச மொழி என்ற பொருளிலும் ஆண்டுள்ளார். எனவே அவரருளிய திரு வார்த்தை என்பது, இறைவனது புகழை விரித்துரைக்கும் திருவுடைய வார்த்தை எனவும், இறைவனுல் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற திருவுடைய உபதேச வார்த்தை எனவும், இருவகையாகப் பொருள் கொள்ளும் நிலையில் அமைந்து நின்றதெனக் கருதுதல் பொருந்தும்

திருவள்ளுவர் குறித்த ஆதி பகவன் என்பதனை மாதிவர் பாகன்' எனவும், மலர்மிசை யேகிளுன் என்பதனை மாமலர் மேய சோதி எனவும் இப்பதிக முதற் பாடலில் அடிகள் குறித்துள்ளமை காணலாம். ஆதி பகவளுகிய முழு முதற் கடவுளின் இயல்பினை ஆதிப் பிரமம் என்ற தொட ரால் அடிகள் குறித்துள்ளார்.

இறைவன் திருப்பெருந்துறையிலே தம் பொருட்டுக் குருவாக எழுந்தருளி ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் திறமும், இடவை மடநல்லாட்குச் சீல மிகக் கருணையளித்த திறமும், பெண்பாலுகந்து மணி வலே கொண்டு மீன் விசி றும் வகையும், வேடுருவாகி மகேந்திரத்து ஆகமம் அருளிய பெருமான் ஆடலமர்ந்த பரிமா ஏறி ஏடர்களை எங்கும் ஆண்டு கொண்ட இயல்பும், உந்து திரைக் கடலைக் கடந்து அன்று இலங்கையதனில் பந்தனை மெல்விரலாள் ஆய வண்டோதரிக்கு அருளிய பரிசும், ஏவுண்ட பன்றிக்கு இரங்கிக் கேவலங் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பும், நாதமுடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னு தலார் பொருட்டு மண்ணிடை வந்து தோன்றிப் பேதம் கெடுத்து அருள் செய்த பெருமையும், இருங்கடல் வாணற்குத் தீயில் தோன்றும் ஓவிய மங்கையர் தோள் புண