பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 211

ரும் உருவும், காதல் பெருகக் கருணை காட்டித் தன் கழல் காட்டிக் கேதங் கெடுத்துத் தம்மை ஆண்டருளிய திறமும், பெருந்துறை யீசன் வண்சாத்திளுேடும் மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகையும் ஆகிய புகழ்ச் செய்திகளை அடிகள் இப்பனுவலிற் பரவிப் போற்றியுள்ளார்.

இதன்கண், ஆதிப்பிரமம்' என்பதும் கேவலம்' என்ப தும் அடிகள் காலத்து வழங்கத் தொடங்கிய வடசொல் லாட்சியாகும். இறைவனே எளிவந்து உறுதிப் பொருளை அறிவிக்க அறிந்து அவன்பால் அன்பு மீதுாரப்பெறும் நிலை யில் அடிகள் அருளிய திருப்பதிகமாதலின், இதற்கு அறி வித்தன்புறுதல்' என முன்ஞேர் கருத்துரை வரைந்

தனர்.

சச. எண்ணப்பதிகம்

திருவாதவூரடிகள் தமது உள்ளக் கருத்தினைத் தம்மை ஆட்கொண்ட வள்ளலாகிய இறைவனுக்குத் தெரிவிக்கும் முறையில் இப்பனுவலேப் பாடியிருத்தலால் இஃது எண்ணப் பதிகம் என்னும் பெயர்த்தாயிற்று. எண்ணம் - உள்ளக் கருத்து. இப்பதிகத்திற்கு ஒழியா இன்பத்து உவகை என முன்னேர் கருத்துரை வரைந்தனர். அடிகள் தம்மை ஆட்கொண்டருளிய முதல்வனது திருவருளில் திளைத்துப் பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும் எனத் தம் மனத்திலுள்ள விருப்பத்தை இறை வனுக்கு அறிவித்து, ' நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே எனவும். நண்பே அருளாய் ' என வும், பிறப்பறுப்பாய் எனவும், உடையவனே என ஆவ என்றருளாயே’ எனவும் இறைவனே வேண்டிப் போற்று கின்ருர்.

" நிறம் வளரும் மலர்ப்பொழில் சூழ்ந் தோங்கு திருத்

தில்லை மன்றுள் நிமல ளுமத் திறம் பெருகும் இன்பம் அருள் என்றல் எண்ணப்

பத்தெனவும் நிகழ்த்த லாமே "

எனவரும் திருப்பெருந்துறைப் புராணத் தொடரால் அடிக ளது எண்ணம் இன்பம் அருள் என இறைவனை வேண்டு தல் என்பது இனிது புலஞகும். எண்ணப்பதிகம் ஆறு திருப் பாடல்களை யுடையதாகும்.