பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

பன்னிரு திருமுறை வரலாறு


சடு. யாத்திரைப் பத்து

உலகிற் பாசத் தொடர்பிலிருந்து விடுபட்டு ஈறிலாப் பேரின்ப வாழ்வாகிய வீடு பேற்றினை நச்சிச் சிவமாநகர்க்குச் செல்லும் நோக்குடன் அன்புடைய அடியார்களே அழைக்கும் நிலையில் அருளிய பத்துப் பாடல்களையுடைய பனுவலாத லின், இது யாத்திரைப் பத்து என்னும் பெயருடைய தாயிற்று.

" பொல்லாத பவத்தை விட்டுச் சிவன் கழற்கீழ்ப்

புகுங் காலம் புகுந்தது எற்கு இங்கு எல்லாரும் வாரும் எனக் கருணையினல்

அழைத்திடல் யாத்திரைப் பத்தாகும் ”

என்பது திருப்பெருந்துறைப் புராணம்.

இதன்கண் திருவாதவூரடிகள் அன்பராகிய அடியார் களை நோக்கி, 'பொய்விட்டு உடையான் கழல் புகக் காலம் வந்தது, போவோம், ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் " என வும், நீர் புலன்களில் புகவே வேண்டா, புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின், மிக்க எல்லாம் வேண்டா, போக விடுமின்கள் எனவும், கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு, பொய் நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே போமாறு அமைமின் எனவும், அடியாரானிர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை ; கடிசேர் அடியே வந் தடைந்து திருக்குறிப்பைக் கடைக்கொண்டு இருமின் என வும், வெகுளி வேட்கை நோய் விடுமின், மிக ஓர் காலம் இனி இல்லை, உடையான் அடிக்கீழ்ப் பெருஞ் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின் எனவும், புகழ்மின் தொழுமின் பூப்புனைமின், புயங்கன் தாளே புந்தி வைத் திட்டு எல்லா அல்லலேயும் இகழ்மின், நாம் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கி நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே எனவும் அன்பினுல் விரைந்து அழைக்கின்ருர்.

உலகியற் பிணிப்பால் தாமதித்தோரது நிலைமைகண்டு இரங்கிய அடிகள், ஏனைய மெய்யடியார்களை நோக்கி, நிற் பார் நிற்க, நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல் வோமே .... .... பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெருதற்கு அரியன் பெருமானே’ எனவும், பெருமான் பேரானந்தத் துப் பிரியாது இருக்கப் பெற்றிர்காள்! அருமால் உற்றுப்