பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 7.

நாடாளும் வேந்தனுக்குத் தவறிழைத்த யான் எங்ங்னம் உய்வேன்? எனப் பலவாறு புலம்பினர். எனது இடர் நிலையை என்னையாட்கொண்ட இறைவனுக்கு எடுத்துரைப் பேன் எனத்துணிந்து, பொழுது புலர்வதன்முன் திருப் பெருந்துறைக் கோயிலுட் சென்று இறைவன் திருமுன் நின்று போற்றியென் வாழ்முதலாகிய பொருளே எனத் தொடங்கும் திருப்பள் ளியெழுச்சியைப் பாடித் துதித்துத் தம்முடைய குறைகளைத் தெரிவித்து முறையிட்டார். நினக்கு யாம் துணையுண்டு. விரைவிற் குதிரை வரும் என்று பாண்டியனுக்குத் திருமுகம் எழுதி விடுப்பாயாக’ என்ற தோர் அருள்வாக்கு விசும்பில் தோன்றியது. அதனைக் கேட்டு மகிழ்ந்த அடிகள், ! சீர்த்திமிக்க பாண்டிய மன்ன னுக்கு அடியேன் வாதவூரன் விண்ணப்பம் :- இன்னும் ஐந்தாறு நாட்களில் குதிரைகள் வந்து சேரும். அவற்றுக் குரிய பந்திகளையும் நீர்த்தடங்களையும் திருத்தமுற அமைத்து நகர வீதிகளையும் குதிரைகளை நடத்தும் செண்டு வெளியை யும் அலங்கரிக்கும்படி ஏற்பாடு செய் தல் வேண்டும் என்று திருமுகமெழுதி அவ்வோலையைத் தூதர் கையிற் கொடுத்து அனுப்பிவிட்டு, மீண்டும் திருக்கோயிலிற் சென்று மனக் கவலை தீர்ந்து சிறிது பொழுது துயில்கொண்டார். அன்ப ரது பாரத்தைத் தம்முடையதாக ஏற்றுகொள்ளும் சிவபெரு மான், அடிகளாரருகே வந்து தோன்றி, ! இக்காரியத்தை யாம் முடித்தல் திண்ணம். இன்னும் மீளவும் வேந்தன் ஆளனுப்புதற்கு முன்னமே நீ அவனையடைந்து அவன் மகிழத்தக்க வகையில் சமா தானம் கூறுவாயாக’ எனக்கூ நி மறைந்தருளினர்.

கனவுநிலை நீங்கி விழிப்புற்ற வாதவூரடிகள், திருப் பெருந்துறை வீசனத்தொழுது விடைபெற்று மதுரையை அடைந்தார். அடிகள் போவதற்கு முன்னரே அவரெழுதிய ஒலயைத் தூதர் வாயிலாகப்பெற்ற பாண்டியன் சினந் தனிந்திருந்தான். அந்நிலையில் வாதவூரர் சென்இ! மன்னனை வணங்கினர். அவரைக்கண்ட பாண்டியன், அன்புடன் வரவேற்றுச் சிறப்பித்துத் தனியே அழைத்துச் சென்று எவ்வளவு குதிரைகள் வாங்கினர்? எந்தத் துறையில் தங்கியிருந்திச் ? தும்மால் வாங்கப்பெற்ாக

శ్లో

குதிசைகள் எவ்வண்ணத்தன? to ------- விஞன். இங்கனம் மன்னன் கேட்ட