பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 笼温数

மலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் என்றும் என் அன்பு நிறைந்த பராவமுது எய்துவது' 'பாவனையாய கருத் தினில் வந்த பராவமுது அந்த மிலாத அகண்டமும் நம் முள் அகப்படும் ஆதி முதற் பரமாய பரஞ்சுடர் அண்ணு வது எல்லையில் மாக்கருணைக் கடல் இன்றினிதாடுதும் : நன்மணிநாதம் முழங்கி என் உள்ளுற நண்ணுவது ' எண்ணிலியாகிய சித்திகள் வந்தெனை எய்துவது வீணை முரன்றெழும் ஒசையில் இன்பம் மிகுத்திடும் சொல்லியலா தெழு தூமணியோசை துவன்றிடும் பண்டறியாத பரானு பவங்கள் பரந்தெழும் சங்குதிரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன சீரடியார்கள் சிவானுபவங்கள் தெரிந்திடும் ' எனவரும் தொடர்கள், அடியார்களாகிய படைவீரர்கள் சிவ மாநகர் எய்தி நுகரும் சிவானுபவமாகிய பராவத்தை நிலை யினை இனிது புலப்படுத்தல் காணலாம். இந்நிலையில் சிவ யோகிகள் தம் அகத்தே கேட்டு மகிழும் பத்து வகை இன் ஞெலிகளையும்,

மணிகடல் யானை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளைபேரிகை யாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க்கல்லது பார்க்கவொண்ணுதே !

(திருமந்திரம் 606) எனவரும் பாடலில் திருமூல தேவர் தொகுத்துக் கூறியுள் é霹”醇”重”。

" திருச்சிலம்போசை செவிவழியே சென்று

நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற " எனத் திருவியலூர் உய்யவந்த தேவநாயனரும், " தூங்கிருள் நடுநல் யாமத்தே மழலையாழ் சிலம்ப

வந்தகம் புகுந்தோன் ” எனக் கருவூர்த்தேவரும் அருளிய பொருளுரைகள் இங்கு ஒப்புநோக்கி உணரத்தக்கனவாகும்.

" வாகுதிருப் பெருந்துறையார் எழுந்தருளப் பெறில்

எல்லா வளங்கள் முற்றும் ஆகும் எமக்கு ; அல்லாத தாகா தென் றியம்பல்

படையாட்சியாகும் "

எனத் திருப்பெருந்துறைப் புராண்முடையார் இப்பதிகக் கருத்தினை எடுத்துரைத்துள்ளார். இதன்கண் எட்டுத் திருப் பாடல்கள் உள்ளன. இறைவன் தன் படைவீரராகிய