பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பன்னிரு திருமுறை வரலாறு


வாதவூரடிகள், இறைவன் திருவருளே மனத்திற் கொண்டு தக்கவாறு விடைபகர்ந்தார். அடிகள் கூறியவற்றைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற பாண்டியன், அவர்க்குப் பல வரிசைகள் நல்கி அவர்தம் மாளிகையிற் செல்லப்பணித்தான்.

மன்னன்பால் விடைபெற்ற அடிகள், திருவாலவாய்த் திருக்கோயிலிற்புக்குச் சொக்கநாதரைப் பணிந்து உமை யொருபாகளுகிய பெருமானே, குதிரைகள் விரைவில் வந்து சேருமென்று பாண்டியன் மகிழ உரைத்தேன். குதிரை வாங்குதற்கென அரசன் தந்த பொருள்களையெல்லாம் அடியார்களுக்குச் செலவிட்டேன். உன்னையல்லால் அடி யேற்குத் துணையாவார் ஒருவருமிலர் எனத் தனி நின்று குறையிரந்தார். அப்பொழுது அஞ்சல், அஞ்சல் என்ற தோர் அருள்வாக்கு விசும்பிடைத் தோன்றியது. அது கேட்டுத் தேறுதலடைந்த வாதவூரர், தமது மாளிகையிற் சென்று இறைவனை வழிபட்டு அமுது செய்து, கருதிய காரியம் எவ்வாறு முடியுமோ என்ற மனக்கவலையுடன் துயில் கொண்டார் அந்நிலையில் உறவினர்கள் வந்து அடிகளை யெழுப்பி, அரசன்பால் அவர் நடந்துகொண்ட செயல் தவறுடைத்தென அறிவுறுத்தினர். நீர் அரசனுக்குச் செய்த தவறுதலால் தும் சுற்றத்தவர்களாகிய எங்களுக்கு என்ன தீங்கு நேருமோ ? எமக்குத்துணையாவார் யார் . எனக்கூறி வருந்தினர்கள் அவர்களது மனக்கருத்துணர்ந்த வாதவூரர், அவர்களே நோக்கி உமக்கும் எனக்கும் என்ன தொடர்புளது? எனக்கு உலகத்தில் வெறுப்புமில்லை ; விருப்புமில்லை. இறைவன் மானிடத்திருமேனிகொண்டு எழுந்தருளி வந்து என்னை ஆட்கொண்ட அன்றே எனது பிறப்பொழிந்தது. அரசனுக்குத் தவறு செய்தலாகாது என்னுங்கருத்தினலேயே இங்கு யான் இப்பொழுது வந்தேன். அரசனிடத்துப் பொருள் பெற்று நேர்ந்த கடன் முழுவதையும் ஓர் உபாயத்தால் விரைவில் தீர்த்துவிடப் போகின்றேன். நீங்கள் உங்களுக்காவன்வற்றைப் பார்த்துக் கொண்டு போமின் எனக்கூறினர். அதுகேட்ட உறவினர் கள் மனம் நொந்து அவரை விட்டு அகன்று போயினர்.

மறுநாள் பாண்டியளுல் அனுப்பப்பட்ட ஏவலாளர் சிலர் வாதவூரரையடைந்து குதிரைகள் வந்தனவோ என வின வினர். அதுகேட்ட அடிகள் குதிரைகள் மெய்யாகவே இப்பொழுது வந்துவிடும். நீங்கள் அவசரப்படுதல் வேண்