பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

பன்னிரு திருமுறை வரலாறு


என, மும்மலங்களை அறவே களைந்து முதல்வன் திருவடி அடைந்து இன்புறும் சிவானந்தப் பேருகிய முடிபொருளை உணர்த்தும் திருப்பாடலுடன் நிறைவுபெற் றுள்ளமை உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

2. திருச்சிற்றம்பலக்கோவை

திருவாதவூரடிகள் தில்லையிற் புத்தர்களை வாதில் வென்று சிற்றம்பலவனை வழிபட்டுத் தவச்சாலையில் தங்கி யிருந்தபோது, அழகிய திருச்சிற்றம்பலமுடையாளுகிய இறைவனே அடிகள்முன் அந்தணகை வந்து தோன்றி, அடிகள் பாடியருளிய திருவாசகச் செழுமறையைத் தம் திருக்கையில்ை எழுதிக்கொண்டு, அகத்திணைக் கோவை யொன்று பாடித்தருக" என அடிகளை வேண்டிய நிலையில், அம்முதல்வனே தன் திருக்கரத்தால் எழுதிக்கொள்ளும்படி திருவாதவூரடிகள் திருவாய் மலர்ந்தருளிய தெய்வப்பனுவல் திருச்சிற்றம்பலக்கோவையாகும். இந்நூல், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் உலகெலாம் உய்ய ஆனந்தத் திருக்கூத்தியற்றியருளும் திருவருள் நிலையமாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் பரவிப் போற்றும் முறையில் அமைந்த அகத்திணைக்கோவை யாதலின் திருச்சிற்றம்பலக் கோவை யென்னும் பெயர்த்தாயிற்று. திருவாசகப் பனுவலைப்போன்று இத்திருக்கோவையும் வாதவூரடிகளது மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேளுகத் திகழ்தலால் இதனைக் கோவைத் திருவாசகம் எனச் சான்ருேர் சிறப்பித்துப் போற்றியுள்ளார்கள்.

அகப்பொருட்டுறைகளைப் பொருட்டொடர்பு அமையும் வண்ணம் ஒரு கோவைப்பட அமைத்துப் பாடப்பெறுவது கோவை என்னும் பிரபந்தமாகும். அகத்துறைகளை நிரல்படக் கோத்து அமைக்கப்பெறுதலின் கோவை என்பது காரணப்பெயர். தமிழ்மொழிக்கே சிறப்பாகவுரிய பனுவல்களுள் அகப்பொருட் கோவையும் ஒன்ருகும். சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய தொகை