பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

பன்னிரு திருமுறை வரலாறு


செல்லுதலும், மனைவி அப்பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும், பிரிந்த கணவன் தான் வருவதாகக் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் ஆற்ருமை மிக்கு இரங்கு தலும், பின் அவன் வந்தபோது அன்பிற்ை பிணங்குதலும் என இவ்வொழுகலாறு முறையே குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்னும் ஐந்து பகுதிகளாக வகுத்து விளக்கப்பெறுதலின் இஃது அன்பின் ஐந்திணை யெனப் பெயர் பெறுவதாயிற்று. திணை என்பது ஒழுக்கம் என்னும் பொருளுடைய சொல்லாதலின், அன்பின் ஐந்திணை என்பதற்கு அன்பினுல் நிகழும் ஐவகைப்பட்ட ஒழுகலா ருகிய அகஒழுக்கம் எனப் பொருள் கொள்ளுதல்வேண்டும்.

ஒருவரை யொருவர் முன் அறியாத நிலையிற் காணும் முதற் காட்சியிலேயே பண்டைப் பிறப்பில் தம்மிருவர்க்கு மிடையே யமைந்த தொன்மை அன்பின் தொடர்புணர்ந்து கண்வனும் மனைவியுமாக ஒருவரையொருவர் இன்றியமையர் தொழுகும் பெருங்கேண்மையுடையார் இவ்வுலகத்து மிகவும் அரியராதலால், உலகத்து அருமையுடையராய்த் தோன்றிய அவர்களை அன்பிற் சிறந்த தலைமக்கள் எனப் பண்டைத் தமிழ்ச்சான்ருேர் பாராட்டிப் போற்றினர். எஞ்ஞான்றும் ஒத்த அன்பினராய் ஒழுகும் இத்தலைமக்களது வாழ்விலே மிக்குத்தோன்றும் பேரன்பின் திறத்தை எடுத்துக் கூறுமுகமாக, ஏனைப் பொதுமக்கள் வாழ்விற் பெருகிக் காணப்படும் ஒவ்வாக் காமத்தையும் ஒருபாற் காமத்தையும் விலக்கி, ஒத்தகாமமாகிய அன்பு நெறியிலே அவர்களைப் பயிற்றுதல் எளிதாம் எனக்கருதினர். இவ் வுயர்ந்த நோக்கத்தினலேயே ஒத்த அன்பினராய தலை மக்களது வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சான்ருேர்களால் அகத்திணைச்செய்யுட்கள் மிகுதியாகப் பாடப்பெறுவனவாயின.

ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவருள்ளத்தே தோன்றி வளரும் இன்ப அன்பின் திறத்தை இனிது விளக்குமுகத் தால் மக்கட் குலத்தாரனவரும் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத்திருவருளாகிய பேரின்ப நிலையை எய்தி இன்புறுதற்கு வழிவகுப்பன அகத்திணை பற்றியமைந்த தமிழ்ச் செய்யுட்களாகும். " கூறும் அருந்தமிழின் பொரு ள்ான்" இவற்றின் குறிப்பினை நன்குணர்ந்தே தேவாரம்