பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

பன்னிரு திருமுறை வரலாறு


சங்கத்திற் சங்கப்புலவர்கள் நடுவே தானும் ஒரு தமிழ்ப் புலவகை வீற்றிருந்து தமிழ் மொழியிலுள்ள அகமும் புறமு மாகிய பொருட்கூறுகளை ஆராய்ந்து முறைப்படுத்தி யருளினுன் என்ற செய்தியை,

சிறைவான் புனற்றிலைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ வன் றியேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத்தோட் கென்கொலாம் புகுந்தெய்தியதே.

எனவரும் திருப்பாடலில் பாங்கன் விளுதல் என்னுந் துறையில் வைத்துத் திருவாதவூரடிகள் சுவைபெறக் குறித்துள்ளார். "தமிழின் துறைகளாவன ஈண்டு அகமும் புறமுமாகிய பொருட்கூறு " எனப் பேராசிரியர் கூறும் விளக்கம், தமிழுக்கும் அம்மொழியில் அமைந்த அகப்பொரு ளொழுகலாற்றிற்கும் உள்ள தொடர்பினை இனிது புலப் படுத்தல் காணலாம்.

அன்பிற் சிறந்த தலைமக்களது இன்ப அன்பின் ஒழுகலாறுகள் எனப் பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத் திலும் சங்கச் செய்யுட்களிலும் தனித்தனித் துறைகளாகக் குறிக்கப்பட்டுள்ள அகத்தினைத் துறைகளையெல்லாம் தெய்வம் கூட்ட ஒருவரையொருவர் கண்ட காட்சி முதலாக இருவரும் ஒருவரையொருவர் இன்றியமையாக் காதற் கேண்மையினராய் உலகத்தார் அறிய மணஞ் செய்து கொண்டு அன்பினால் ஊடியுங் கூடியும் மகிழ்தல் ஈருக ஒரு கோவைப்படத் தொகுத்துக் கட்டளைக் கலித்துறை யாப்பினுல் கூற்றும் மாற்றமும் அமைய நாடகக் காப்பியம் போன்று இயற்றப்பெறும் பொருட்டொடர் நிலைச்செய்யுள் அகத்திணைக் கோவையாகிய இப்பிரபந்தமாகும். இக் கோவைப் பிரபந்தம் தொடர்நிலைச் செய்யுள் வகையினைச் சார்ந்தது என்பது,

கோவையுந் தொகையும் ஆவயின் வரையார் ” என்ப தளுல் இது தொடர்நிலைச் செய்யுளாதலின்" (திருக்கோவை 252-ம் செய்யுள் உரை) எனப் பேராசிரியர் கூறுதலாற் புலம்ை. இதன்கண் குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல் என்னும் ஐந்திணை யொழுகலாறுகளும் ஒருங்கேயமையப்