பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதஆண்டிகள் o

டாம். நகரத்தை அலங்கரித்து வைக்கும்படி சொல்லுமின். எனது சொல் தப்பாது ? எனக்கூறியனுப்பினர். அடிகள் குறித்த காலம் வந்தும் குதிரைகள் வந்து சேரவில்லை. அதனையெண்ணிச் சினமுற்ற பாண்டியன், முறைசெய் வோரை வாதவூரர் பால் அனுப்பிக் கேட்கச்செய்தான். அடிகள் முன்போலவே மறுமொழி சொல்லியனுப்பிவிட்டார். இந்நிலையில் அமைச்சர் பலரும் ஒன்றுகூடி அரசனையணுகி வேந்தர்பெருமானே, பித்தனுகிய வாதவூரனது வார்த் தையை மெய்யென நம்பி நகரத்தை அலங்கரிக்கச்செய்தன. குதிரை வாங்கி வருவதாகக் கூறிச்சென்ற வாதவூரன் பெருந்துறையையடைந்து பித்தனுகி நினது பொருள் முழு வதையும் மனம்போனபடி செலவழித்து விட்டான். இரக்க மின்றி அவனைத் தண்டித்து அவனிடமிருந்து பொருளை வாங்கிக்கொள்ளுதலே இனிச் செய்யத்தகுவதாகும் என அறிவுரை கூறித் தெளிவித்தனர்.

அமைச்சர் சொற்கேட்ட பாண்டியன், தனது தெளி வின்மையால் நேர்ந்த பொருளழிவினை யெண்ணிப் பெரு மூச்சு விட்டுக் கண்களில் தீயெழச் சினங்கொண்டான். மையல் நெஞ்சினளுகிய வாதவூரனை வளைத்துப்பிடிமின் ' எனப் பிரம்படிக்காரரை ஏவிஞன். அவர்களும் மன்னன் பணித்த வண்ணம் வாதவூரடிகளேயடைந்து வளைத்துப் பிடித்தனர். எனினும் அடிகளது சிவபத்தி மாண்பினை யுணர்த்து அவரைத் துன்புறுத்த அஞ்சினர் வாதவூரரைச் சிறைப்படுத்தி வருத்தும்படி பாண்டியன் பின்னுஞ்சிலரை அனுப்பினுன். அவர்கள் அடிகளைப்பற்றிச் சென்று கொடுஞ் சிறையில் வைத்துத் துன்புறுத்தினுக்கள் துயரம் பொருத அடிகள், இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்புவா ராயினர் . ஒளிசெய் மானுடமாக வந்து எனது நெஞ்சினை உருக்கிப் பணிகொண்ட அருளாளா, நீ கூறிய மொழி தப்பாதெனத்துணிந்து, குதிரை விரைவில் வருமென்று மன்னனுக்கு உரைத்தேன் யான் இங்கனம் துயருறவும் நீ இரங்காததென்குே குதிரைகளைக்கொண்டு விரைவில் வருவாயாக என அழுதரற்றிக் குழைத்தபத்து, அருட்பத்து ஆகிய பனுவல்களைப்பாடிப் போற்றினர்.

அடியார் வருத்தம் தரியாதாசாகிய சிவபெருமான். த பால் அன்புடைய வாதஆசடிகளது மனத்துயரைப்போச்