பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

பன்னிரு திருமுறை வரலாறு


மகிழ்தல். பொழிலிடைச் சேறல் என்னும் துறை இடந்தலைப் பாட்டிற்கே யுரியது. மேல், பாங்கற்கூட்டத்தில் மின்னிடை மெலிதல் என்பது முதலாக நின்று வருந்தல்' என்பது ஈருகக் கூறப்பட்டதுறைகள் பன்னிரண்டும் இடந்தலைப் பாட்டிற்கும் உரியனவாம்.

இவற்றுள் பாங்கற்கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப் பாடுநிகழும் ; இடந்தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற் கூட்டம் நிகழும். மேற்குறித்த இரண்டனுள் ஒன்ருற் சென்று எய்திய பின்னர்த் தலைமகன் தெளிவுபெற்று மணந்து கொள்ளுதல் தக்கது. தெளிந்து மணந்து கொள்ளானுயின் தலைமகள் கண்ணுற் காணப்பட்ட காதற் ருேழியை வழிபட்டுச் சென்று எய்துதல் முறைமை என்பர். காதற்ருேழியை வழிபடுதல் என்றது, தான் உற்றகுறை யினைத் தெளிவாக முன்னர்க்கூருது இரந்து நின்று கரந்த சொற்களால் தன் கருத்தினை அறிவித்துத் தோழியை ஐயவுணர்வினளாக்கி அதுவழியாகநின்று தன் குறை யினை அவளுக்குக் கூறுதல்.

மதியுடம்படுத்தல் என்பது, தலைமகன் தோழியின் கவர்த்த அறிவினை ஒருப்படுத்தல். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தநாள் முதற்கொண்டு தலைமகளது கண் சிவந்து நுதல்வேறுபாடு காட்டிற்று. இவளுக்கு இவ் வேறுபாடு தெய்வத்தால் ஆயிற்ருே அன்றி மக்களால் ஆயிற்ருே எனவும், இனி இவனும் அதுமுதற்கொண்டு தழையும் கண்ணியும் கொண்டு பின்னிலை முனியாது நிற் கின்ருன். இவனது குறை யார்கண்ணதோ எனவும் தோழியின் அறிவு ஒன்றினும் துணிவுபிறவாது பலதலைப் பட்டு மயங்கியது. வேறுபட்ட அறிவினளாகிய தோழி, இவள் வேறுபட்டது இவன் காரணமாகப் போலும், இவன் இரந்து பின்னின்றது இவள் காரணமாகப் போலும் என ஒருங்கு சிந்தித்து வேருக வகுத்துணரும்படி தலைமகன் குறையுற்று நிற்றல் மதியுடம்படுத்தல் எனப்படும். இது, பாங்கியிடைச் சேறல்முதல் இடைவிதைல் ஈருகப் பத்துத் துறைகளையுடையது.

பாங்கிமதியுடன்பாடு, இருவரும் உள்வழி அவன்வர

வுணர்தல் முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் என மூன்றுவகைப்படும். அவற்றுள், இருவரும் உள்வழி அவன்