பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

பன்னிரு திருமுறை வரலாறு


அவற்றுள் வரைவுமுடுக்கமாவது, தலைமகளை விரைந்து மணந்து கொள்ளும்படி தோழி தலைமகனை வற்புறுத்துதல். இது, வருத்தமிகுதி கூறி வரைவுகடாதல் முதல் பொலி வழிவுரைத்து வரைவுகடாதல் இறுதியாகப் பதினறு துறைகளையுடையது.

வரைபொருட் பிரிதல் என்பது, தலைமகளை மணந்து கொள்ளுதற்கு வேண்டிய பரிசப் பொருளை ஈட்டுதற் பொருட்டுத் தலைமகன் பிரிந்து செல்லுதல். இது, முலை விலை கூறல் முதல் நிதிவரவு கூருநிற்றல் ஈருக முப்பத்து மூன்று துறைகளையுடையதாகும்.

மணஞ் சிறப்புரைத்தல் என்பது, தலைமகன் தலைமகளை மணந்துகொண்டு மனையறம் நிகழ்த்துதலின் சிறப்பின்ை விரித்துரைப்பதாகும். இது, மனமுரசு கூறல் முதல் கல்வியின்பங் கூறலீருக ஒன்பது துறைகளையுடையதாம்.

ஒதற் பிரிவு என்பது, தலைமகளை மணந்து வாழும் தலைமகன், கலை நூல்கள் பலவற்றை முன்னரே ஓதிமுடித்தா ஞாயினும், தான் ஒதிய நூற்பொருள்களினும் அமையாது மிக்குள்ள உறுதிப்பொருள்களை யறிவுறுத்தும் நூல்கள் மேலும் உளவோ என ஆராய்ந்துணருங் கருத்தினுலும், கல்வியால் தன்னில் தாழ்ந்தாரை அறிவுமிகுதி காட்டி அறிவித்தலாகிய அறநூல் விதி பற்றியும் ஓதுதல் கருதித் தலைமகளைப் பிரிந்து செல்லுதல். இது, கல்வி நலங்கூறல், பிரிவு நினைவுரைத்தல், கலக்கங்கண் டுரைத்தல், வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் என நான்கு துறைகளை யுடையது.

காவற் பிரிவு என்பது, எல்லாவுயிர்களையும் பாது காக்க வேண்டும் என்னும் அறநூல் விதிபற்றி நாடு காத்தற் பொருட்டுத் தலைமகன் தலைமகளைப் பிரிந்து செல்லு தல். இது, பிரிவறிவுறுத்தல், பிரிவு கேட்டிரங்கல் என்னும் இரு துறைகளையுடையது.

பகைதனி வினைப் பிரிவு என்பது, தம்முள் முரணிப் போர் செய்யக்கருதிய வேந்தர் இருவரையும் அவர்தம் பகைமை தணிந்து நட்பினராகுமாறு அன்பினுற் பொருந்தச் செய்தற் பொருட்டுத் தலைமகன் தலைமகளைப் பிரிந்து துதாகச் செல்லுதல். பிரிவுகூறல், வருத்தந் தணித்த்ல் என்னும் துறையிரண்டும் இதன் பாற்படும்.