பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை @盛勤

முதலிய திணை நிலைப் பெயர்களாலேயே இத்தலைவன் குறிக்கப்பெறுவான்.

திருக்கோவையாகிய இப்பனுவலிற் போற்றியுரைக்கப் பெறும் பாட்டுடைத் தலைவன், தில்லைமூதூர்ப் பொதுவினில் தோன்றி எல்லையிலானந்த நடம்புரிகின்ற பரமகாரணளுகிய சிவபெருமாளுவன். அம்முதல்வனது திருவடியைத் தன் சிந்தையிலும் சென்னியிலும் கொண்டு போற்றும் திருத்தக வுடைய தலைமகனே இத்திருக்கோவையில் விரித்துரைக்கப் பெறும் அகத்திணை யொழுகலாற்றுக்குரிய கிளவித் தலைவன் ஆவன்.

எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய தில்லைச் சிற்றம்பலவனே திருப்பெருந்துறையில் குருவாக எளிவந்து ஆட்கொண்டருளினமையால் பசுகரணங்களெல்லாம் பதி கரணங்களாக, ஐம்பொறியுணர்வுகளின் நீங்கிச் செம்புலச் செல்வராகிய மணிவாசகப் பெருந்தகையார், அறிவனுரற் பொருளும் உலக நூல் வழக்கும் என இவ்விரு பொருள்களே யும் விளக்கும் முறையில் இத்திருக்கோவையினை அருளிச் செய்துள்ளார்.

" திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி எடுத்துக்கொண்டாரோ எனின்,............

தில்லை மூதூர்ப் பொதுவினிற் ருேன்றி எல்லையி லானந்த நடம் புரிகின்ற பரமகாரணன் திருவருள தளுல் திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர் ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச் செம்புலச் செல்வராயினர் ஆதலின் அறிவனு ற் பொருளும் உலக நூல் வழக்கும் என இருபொருளும் துதலி யெடுத்துக்கொண்டனர் ” என இந்நூல் உரைமுகத்தமைந்த பேராசிரியர் வாய்மொழி இவ்வுண்மையினைத் தெளிவுபடுத்தல் காணலாம்.

அறிவனுரற் பொருளாவது, முற்றுணர்வினணுகிய இறைவன் அருளிச் செய்த ஆகம நூல்வழியிற் கூறப் பெற்ற ஞானயோக நுண்பொருள். உலக நூல் வழக்காவது, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவரும் நல்லூழின் செயலால் எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் மறைவிற் கலந்து அளவளாவிப்பின் உலகத்தார் அறிய மணந்துகொண்டு மனையறம் நிகழ்த்தி இன்புற்று வாழ்தலாகிய உலகியல் வாழ்வு. "உலகியல் வேத

16