பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

பன்னிரு திருமுறை வரலாறு


எனப் பேராசிரியர் திருக்கோவையார் உரைமுகத்து அவை யடக்கமாக நுதலிப்புகும் கருத்துரை, ஆகம நூல் வழியின் நுதலிய ஞானயோக நுண்பொருளாகிய அறிவனுாற் பொருளில் அவர் கொண்டுள்ள நன்குமதிப்பும் நூற் பயிற்சியும், உலகநூல் வழியின் நுதலிய அகனைந்திணைப் பொருள் பற்றிய தமிழிலக்கிய நூல்களில் அவர்க்கிருந்த ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் ஆகியவற்றைப் புலப்படுத்து வதுடன், அறிவினுற் சிவனே யாகிய மாணிக்கவாசகப் பெருமான்பால் அவர் கொண்ட பத்தியினையும் அடிகள் திருவாய் மலர்ந்தருளிய அருள் நூலாகிய இத் திருச்சிற்றம் பலக் கோவையில் அவர் கொண்டுள்ள நன் மதிப்பினையும் இனிது விளக்கும் நிலையில் அமைந்திருத்தல் அறியத்தக்க தாகும்

இவ்வுரையாசிரியர், பாடல் தோறும் முதற்கண் அப் பாடலுக்குரிய துறை பற்றிய விளக்கமும், அதனையடுத்துக் கோவைப்பாடலும், அதன்பின் அதன் கருத்துரையாக அமைந்த கொளுவும், அதனையடுத்துப் பாடற்பொருளாகிய பொழிப்புரையும், அதன்பின் பாடலில் அமைந்த சொற் பொருள் நயங்களையும் கொளுவின் சொற்பொருளையும் விளக்கும் சிறப்புரையும் அமைய இம்முறையில் இத்திருக் கோவைக்கு உரை வரைந்துள்ளார். இவ்வுரையில் அகத்திணைக் கிளவிக் கொத்துக்கள் இருபத்தைந்தினைத் தொகுத்துக் கூறும் நூற்பாவும், அதன்கண் அமைந்த கிளவிக்கொத்துக்களின் துறைகளை விரித்துரைக்கும் நூற் பாக்களும் அவற்றிற்கமைந்த உரைப் பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. அகத்திணை யொழுகலாற்றினை வகுத்துக் கூறும் இச்சூத்திரங்களும் உரைப்பகுதிகளும் பேராசிரிய ராலேயே இயற்றப்பெற்று இத் திருக்கோவையுரையிற் சேர்க்கப்பெற்றிருத்தல் கூடும் எனக்கருதுதல் பொருந்தும்.

இறையனர் களவியலுரையினை எழுத்துருவில் அமைத்த உரையாசிரியர், அவ்வுரையிற் குறிக்கப்பெறும் அகத்துறைகளை விளக்கி அத்துறைகளுக்குரிய உதாரண இலக்கியமாகப் பாண்டியனைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு பாடப்பெற்ற அகத்திணைக் கோவைச் செய்யுட் களையும் தொடர்புடைய சங்கச் செய்யுட்கள் சிலவற்றையும் எடுத்துக்காட்டி அகப்பொருளொழுகலாற்றின் இயல்பினை இலக்கியச் சான்றுடன் இனிது விளக்கியுள்ளார். அவ்