பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 盛盛器

வுரையாசிரியர் காட்டிய அகப்பொருள் விளக்கங்களை நன் குணர்ந்த பேராசிரியர், அகப்பொருள் இலக்கியமாகிய இத் திருக்கோவையின் பாடற்பொருளை விளக்கும் நிலையில், அதற்கு இன்றியமையாத கிளவித்தொகை, துறை முதலியன பற்றிய இலக்கண விளக்கங்களைப் பாடல் தோறும் முன்னர்த் தந்து, அதன் பின் பாடற்பொருளையும் பொருள் நலம் அணிநலம் முதலியன பற்றிய விளக்க வுரையினையும் கருத்துரைப் பகுதியாகிய கொளுவின் அருஞ் சொற் குறிப்புக்களையும் உடன் வரைந்து, அகப்பொரு ளிலக்கியமாகிய இத்திருக்கோவையினைக் கற்போர் இதன் வாயிலாக அகப்பொருளிலக்கணத்தினையும் ஒருங்குனர்ந்து மகிழும் வண்ணம் இவ்வுரையினைத் திறம்பட அமைத் துள்ளார்.

இறையனர் களவியலுரையினை அடியொற்றித் திருக் கோவைக்கு உரைகாணக் கருதிய பேராசிரியர், தம் உரையின் இடையிடையே மாளுக்கர் வினவுமாறு போன்று உரிய தடைகளை நிகழ்த்தி அவற்றிற்குத் தக்க விடை கூறி யும், நோக்கு என்னும் செய்யுளுறுப்பினைக் கூர்ந்துணர்ந்து பாடற்ருெடர்களை மறித்து நோக்கி அவற்றிலமைந்த நுண்பொருள் நயங்களைச் சுவைபெற விளங்க உணர்த்தியும், பாடல்களில் அமைந்த உள்ளுறையுவமை, ஏனையுவமை, உருவகம் சிலேடை முதலிய அணி நலன்களை எடுத்துக் காட்டி விளக்கியும், அடிகள் அருளிய இத்திருக்கோவைக்கும் திருவாசகத்திற்கும் உள்ள ஒப்புமைப் பகுதிகள் சிலவற்றை ஆங்காங்கே குறிப்பிட்டும், திருக்கோவைத் திருப்பாடல்களிற் பயின்ற திரு, செல்வு, சோத்தம், படிச்சந்தம் முதலிய சொற்களுக்குச் சிறந்த விளக்கங்கள் தந்தும் இனிய செந் தமிழ் நடையில் இவ்வுரையினை யமைத்திருப்பது, இத்திருக் கோவையினைக் கற்பார்க்குக் கற்குந்தோறும் கற்குந்தோறும் கழிபேருவகையினை விளைப்பதாகும்.

திருக்கோவையாருரையிற் பேராசிரியர் தந்த விளக்கங் கள் சிலவற்றை நாற்கவிராசநம்பி தாம் இயற்றிய அகப் பொருள் விளக்கத்திற் சூத்திரங்களாக எடுத்தாண்டுள்ளார். திருக்கோவையார் 70-ஆம் பாடலுரையில் இவற்றுள் கைக்கிளை யென்பது ஒரு தலைக்காமம். பெருந்திணை யென் பது பொருந்தாக் காமம் ' எனப் பேராசிரியர் குறித்த உரைத்தொடர்கள், நம்பியியற்றிய அகப்பொருள் விளக்கத்