பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 24?

குமிழ், கோங்கு, காந்தள் எனப் பல நிலங்களுக்கும் உரிய பூக்களைக் கூறிய அதனுல் நிலமயக்கம் கூறியவாருயிற்று. ஆகவே பல நிலங்களினுஞ்சென்று துய்க்கும் இன்பமெல் லாம் தில்லையின் வாழ்வார் ஆண்டு இருந்தே துய்ப்பர் என்பது போதரும். போதர, இம்மையின்பத்திற்குத் தில்லையே காரணம் என்பது கூறியவாருயிற்று, ஈசர் தில்லை என்றதன்ை மறுமையின்பத்திற்கும் காரணமாதல் சொல் லாமையே விளங்கும். தெய்வ மருவளர் மாலை என்றதஞல், தாமரை முதலாயினவற்ருன் இயன்ற பிற மாலையோடு இதற்கு வேற்றுமை கூறியவாரும், உருவளர் காமன் தன் வென்றிக் கொடி என்றது, மன்மதன் சிவபெருமானது நெற்றிக் கண்ணில்ை நோக்கப்பட்டு நீருகி உருவிழப்பதன் முன் தோல்வியுருத ஆணையுடையணுய் நின்று உயர்த்துள்ள வெற்றிக் கொடியினை. திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள் என்ருங்கு அவ்வப் பூக்களுக்குத் தக்க அடைமொழி கொடுத் துக் கூறிய ஆசிரியர், கோங்கு என அடைமொழியின்றிக் கூறியது, தனக்கெனத் தனி நிலம் பெருத பாலை நிலஞ்

சொல்லுதல் நோக்கி என்பர் பேராசிரியர்.

உடனிலைச் சிலேடையாவது, ஒரு பாட்டு இரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. அவ்விரண்டனுள் இத்திருக்கோவையின் உரைக்கின்ற முதற்பொருளாவது, காமனது வென்றிக் கொடி போன்று விளங்கி, அன்ன நடை யுடையதாய்த் தாமரை, காவி, குமிழ், கோங்கு, காந்தள் என்னும் ஐவகைப் பூக்களால் தொடுக்கப்பெற்று ஓங்கும் தெய்வ மருவளர் மாலையின் வியக்கத்தக்க தோற்றப் பொலிவாகும். இவற்றுள் தாமரை மலர் தலைமகளின் முகத் தினையும், காவிமலர் கண்களையும், குமிழமலர் மூக்கினையும், கோங்கரும்பு கொங்கையினையும், காந்தள்மலர் கைகளையும் ஆகுபெயராற் குறித்து நின்றன. தலைமகளைக் கண்டு வேட்கையுடை யஞய் நின்ற தலைமகன், அவளை ஒரு தெய்வப் பூமாலையாக உருவகங்கொண்டு, காமனது வெற்றிக்கொடி யோடு உவமித்துச் சொன்னன் என்பதாம். திருவளர் தாமரை” என்று முகம் முதலாக எடுத்துக்கொண்டு, 'அன்ன நடை' என்று பாதத்திலே முடித்தலால், இது கேசாதி பாத மாக வருணிக்கப்பட்டதென்றறிக,

தாமரை மருதநிலப்பூ, காவி (நீலம்) நெய்தல் நிலப்பூ. குமிழ் முல்லைநிலப்பூ, கோங்கு பாலைநிலப்பூ, காந்தள்