பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

பன்னிரு திருமுறை வரலாறு


குறிஞ்சிநிலப் பூ. இந்த ஐந்து பூக்களாலும் முறையே மருதம், நெய்தல், முல்லை, பாலை, குறிஞ்சி என்னும் ஐந்தினையொழுகலாறுகளையும் குறிப்பாக உணர்த்தினர். பைங்காந்தள் என்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலால் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகிய குறிஞ்சியே கூறி ஞர். "ஓரிடத்து ஒரு கலியாணம் உண்டானல் எல்லாரிடத் தும் உண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத்துக்கூடி அக்கலியானத்தைச் சிறப்பித்தாற் போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன " என்பர் பேராசிரி யர். உருவளர் காமன்றன் வென்றிக்கொடி என்றமையின், அன்பிஞனே நிகழ்ந்த காமப்பொருளாகிய இவ்வகத்திணை யொழுகலாற்றைக் குறிப்பான் உணர்த்தினர். யாரும் கேட்பாரின்றித் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னமை யின், கந்தருவர் ஒழுக்கத்தை ஒத்த களவொழுக்கத்தையே குறித்தார். ஈசர் தில்லை என்றமையின், வீடுபேற்றின் பயத் தது என்பதனையும் ஒருங்கு குறித்தாராயிற்று.

களவொழுக்கம் என்னும் பெயர் பெற்று, வீடுபேற்றின் பயத்ததாய், அன்பினல் நிகழ்ந்த காமப்பொருள் நுதலிக் கந்தருவரொழுக்கத்தோடு ஒத்துக் காமனது வென்றிக் கொடி போன்று ஐந்திணையின் கண்ணும் வென்று விளங்கா நின்ற கடிமலர்மாலையின் வரலாறு இத்திருக்கோவையின் கண் உரைக்கப்படுகின்றது என்றவாறு. களவொழுக்கத் தினை ஒரு மாலையாக உட்கொண்டு உருவகவாய்பாட்டான் உணர்த்தினர் என்பது இத்திருப்பாடற்குரிய இரண்டாவது பொருளாகும்.

இங்ங்னம் இத்திருக்கோவையின் முதற்கண் அமைந்த இத்திருப்பாடல், நூல்நுதல் பொருளைத் தன்னகத் தடக்கி உடனிலைச் சிலேடையாய் இருபொருள் தந்துநிற்குந் திறத்தினை இதனுரையிற் பேராசிரியர் இனிது விளக்கி யுள்ளர்.

அகப்பொருளொழுகலாற்றில் வெளிப்படக் கூருது குறிப்பான் உணர்த்தத் தகுவனவற்றைக் கூறுதற்கு அமைந் தது உள்ளுறை யுவமமாகும். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை முதலாகவுள்ள கருப்பொருள்களுள் தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களின் நிகழ்ச்சியினை எடுத்து உரைக்குமுகத்தால், அந் நிகழ்ச்சியினை உவமையாகக்