பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 11

கூடத்தருகே சோலேயிற் புகுந்த குயிலை நோக்கிக் குயிற் பத்துப் பாடினர். அவ்வளவில் இறைவனருளால் குதிரைத் திரள்கள் மதுரை நகர்க்குள்ளே புகுந்தன. அவற்றைக் கண்டு பாண்டியன் பெரிதும் வியந்தான். கேட்போர் நெஞ் சங்கரையத் திருவாசகப் பாடல்களைப் பாடிப் போற்றும் வாத ஆரடிகளே அழைத்துவரச் செய்து அவரைத் தன்னருகே அமர்த்தி அவர்தம் கண்களில் வழியும் நீரைத்துடைத்துத் தான் செய்த பிழையினைப் பொறுத்தருளும்படி வேண்டினன்.

இதற்குள் குதிரைவீரர்கள் குதிரைகளை நடத்திக் கொண்டு உடன் வர இறைவர் அழகியதோர் பரிமேலமர்ந்து அரச வீதி வழியே வந்தார். பரிமேலழகராய் வந்தருளிய அவரது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்ட இளமகளிர் கூறுவதாக அடிகள் அன்னைப் பத்தினைப் பாடினர். குதிரை களைக் கொண்டுவந்த வணிகச் சாத்தினர் அனைவரும் உரு வம் பருவம் முதலியவற்ருல் ஒத்த இயல்பினராதலைக் கண்டு வியந்த பாண்டியன், வாதவூரரை நோக்கி இவர்களுள் தலைவர் யார் எனக் கேட்டான். அவரும் 'இப்போது குதிரை யின் முன்னே வந்து தோன்றுவர் எனக் கூறினர். அவ் வளவில் சிவபெருமான் வெள்ளைப் பரிமீது முன்வந்து தோன்றி அரசே, சிறிது நேரம் கண்ணிமையாதிருந்து காண்பாயாக’ என மொழிந்து குதிரையின் பலவகைக் கதி களையும் தாம் அமர்ந்துவந்த குதிரையைக்கொண்டு நடத்திக் காட்டினுள். அவருடன் வந்த வீரர்களும் தத்தம் குதிரை யினை அவ்வண்ணமே நடத்திக் காட்டினர்கள். அது கண்ட மன்னன், குதிரை வீரர்களை நோக்கி, தும் தலைவர் யார் என வினவிஞன். சிவகணத் தலைவராகிய அவர்கள், தம்முடன் வந்த இறைவனைச் சுட்டிக்காட்டி, யாவருக்கும் தலைவர் இவரே எனத் தெரிவித்தார்கள். குதிரைச் சேவகளுகிய இறைவனைக் கண்ட பாண்டியன், வியப்பிலுைம் களிப்பின லும் தன்னை மறந்தாளுய்க் கைகள் தலைமேற் குவிய வணங் குதற்கு எழுந்தவன். தான் ஒரு குதிரைப் பாகனை வணங்கு தல் தக்கதன்றென நினைந்து வாளாவிருந்தனன். அங்கி ருந்தோர் அனைவரும் பரிப்பாகளுகிய இறைவனைத் ெ தாழுது போற்றினர். பாண்டியன், அமைச்சர்களை நோக்கிக் குதிரை வாணிகச் சாத்தின் தலைவராகிய அவர் நம் சொக்க நாதரைப் போலவே எனக்குத் தோன்றுகின்ருர், அ கொணர்ந்த குதிரைகளைக் காணுங்கள். காலத்தாழ்த்த