பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 253

இப்பொருள். திருவாதவூரடிகள் திருப்பெருந்துறையில் தமக்குக் குருவாக எளிவந்து அருள் செய்து மறைந்தருளிய இறைவன், மீண்டும் தம் கண்காண எழுந்தருளிய அற்புத நிகழ்ச்சியினை நினைந்து வியந்து போற்றும் நிலையில் அமைந் திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும். அகத்தினையொழுக லாற்றுக்குரிய கிளவித்தலைவன், தலைவியைத் தன்னுயிரெனக் கண்டு வியந்துரைப்பதாக அருளிச் செய்யப் பெற்ற இத் திருப்பாடலில், அடிகள் தம்மை வலிய வந்து ஆண்டருளிய இறைவனை நினைந்து அம்முதல்வனது திருவருளை வியந்து போற்றுதலாகிய இப்பொருளும் வெளிப்பட்டுத் தோன்று மாறு அமைத்த நுட்பம், உய்த்துணர்ந்து போற்றத்தக்க தாகும்.

  • சிங்கங்கள் கூடி யானை வேட்டம் செய்யும் நள்ளிருளில் வள்ளலை வாவென்று சொல்லத்தகுமோ என்று, வழியிடை நேரும் துன்பம் நினைந்து மறுத்த தலைமகள், தலைமகன் ஆற்ருனுகிய நிலைமையைத் தோழி சொல்லக் கேட்டு, இரவில் அவன் வருதற்கு உடம்பட்டு இசைந்துரைப்பதாக அமைந்தது,

ஓங்குமொருவிடம் உண்டம்பலத்தும்ப ருய்யவன்று

தாங்குமொருவன் தடவரை வாய்த்தழங் கும்மருவி

வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து

வாங்கு மவர்க்க றியேன்சிறி யேன் சொல்லும் வாசகமே. (158) எனவரும் திருப்பாடலாகும். " உலகம் முழுதையும் சுடும் வண்ணம் மேன்மேலும் வளரா நின்றதோர் நஞ்சினைத் தான் உண்டு, தேவரெல்லாம் உய்யும்வண்ணம் அந்நாளில் தாங்கிக் காத்தருளிய சிற்றம்பலத்தாகிைய ஒருவனது பெரிய மலையிடத்து, ஒலியா நின்ற அருவியாற் பெருகுகின்ற சுனைநீரின்கண்ணே அன்ருெருநாள் யான் வீழ்ந்தழுந்தி இறக்கும் இடர்நிலையினேனுக, அந்நிலையில் என்னைப்பற்றி எடுத்துக் கரையேற்றி உய்வித்த பெரியோருக்குச் சிறியேன கிய யான் சொல்லுவதோர் மறுமொழியை அறிந்திலேன் ” என்பது இதன் பொருள். யான் சுனைப்புனல்வாய் வீழ்ந்து அழுங்கிய அன்று தாமே வந்து எடுத்து உய்வித்தாற்போல, வழங்கா இருள்நெறியில் தாம் வருதலால் எனக்கு வரும் இடுக்கணையும் தாமே நீக்கின் அல்லது யான் அறிவதொன் றில்லை எனக் கூறித் தலைமகள் குறைநேர்ந்தாள்

என்பதாம்.