பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 255

ஆகிய தில்லையம்பலவன் ’ என்பது இத்தொடரின் பொரு ளாகும். சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்ற லின் அவள் அத்தளும் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகளும் என்றும் கூறினர் இமவான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்' என்பது உம் அப்பொருள் மேல் வந்தது ' என இத்தொடர்ப்பொருளை விளக்குவர் பேராசிரியர்.

" தெவ்வரை மெய்யெரிகாய்சிலை யாண்டுஎன்னை ஆண்டு

செவ்வரை மேனியன் ” (திருக்கோவை-114). (கொண்ட எனவரும் தொடரில், அடிகள் தம்மை வலிந்து ஆண்டு கொண்டருளிய இறைவனது அருட்டிறத்தை வியந்து பாராட்டுகின்ருர், பகைவரை மெய்யெரித்த மேருமலை யாகிய வில்லைப் பணிகொண்டு பழகிப் பின் (வலிய நெஞ்சின கிைய) என்னை அடிமை கொண்ட சிவந்த மலைபோலும் திருமேனியையுடையணுகிய இறைவன் ' என்பது இத்தொட ரின் பொருளாகும். " வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னை ஆண்டான் என்பது போதர, காய்சிலை ஆண்டு என்னை ஆண்டு கொண்ட என்ருர், என்னைத் தனக்கு அடிமை கொள்ளுதல் காரணமாக அல்லது தனக்கு ஒரு பகையுண்டாய்ச் செய்ததன்று போலும் என்பது கருத்து. கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டு என்னை நின் கழற்கு அன்பளுக்கிளுய் ' என்பதும் அது ' எனப் பேராசிரி யர் தரும் விளக்கம், திருவாசகத்திற்கும் திருக்கோவைக்கும் உள்ள பொருளொற்றுமையினை இனிது புலப்படுத்துதல் ö了邸芯矿Q}靶)

தில்லையான் அருள் போன்று அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐயமெய் அருளே (திருக்கோவை-180) எனவரும் தொடர், இரவுக்குறி வந்தொழுகா நின்ற தலை மகனை நோக்கித் தோழி அலரறிவுறுத்துவதாகும். ஐயனே, நினது மெய்யாகிய அருள் தில்லையானருளைப் போன்று அரும்பாம் நிலைமையைக் கடந்து அலராய் விளைவதாயிற்று' என்பது இத்தொடரின் பொருளாகும். தில்லையான் அருள் பெற்ருர் உலகியல்பினராய் நில்லாமையின், அவ்வருள் உலகத்தார்க்கு அலராம் என்பது கருத்து, ' நாடவர்

திருவாசகம் - திருப்பொற்சுண்ணம் 13. 2. டிெ - திருச்சதகம் 94.