பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

பன்னிரு திருமுறை வரலாறு


சொல்வாரது கருத்து வகையாலும் உலகத்துப் பொருள் களுள் இவற்றைவிடச் சிறந்தன. பிற இல்லாமையாலும் உயர்ந்தனவாய் இறைவனுக்கு உவமையாயின என்பர் பேராசிரியர்.

தம்மைச் சார்பாக எண்ணி வந்தடைந்தவர்கள், அறி யாமை காரணமாகத் தம்பாற் பிழை செய்தனராயின், தலைமை வாய்ந்த பெரியோர்கள், அப்பிழை அவரது அறியாமையால் நேர்ந்தது எனத் தம் மனத்துட்கொண்டு அதனைப் பொறுத் தருள்வர். இடையாயினர், பிழை புரிந்தோரைத் தம்மொடு தொடர்பு கொள்ளாதவாறு நீக்கிவிடுவர். கடையாயினர், குற்றம் புரிந்தோரை ஒறுத்து அழிப்பர். எல்லாப்பொருட் கும் முன்ளுேளுகிய இறைவன், தன் பாற் பிழைசெய்த அன்பரிடத்து இம்மூவகைச் செயல்களையுஞ் செய்யாது, அவர் செய்த குற்றங்களை நீக்கிக் குணங்கொண்டு அன்னே ரைப் பிறவித் துன்பத்துட் புகாவண்ணம் காக்கும் பேரரு ளுடையய்ைச் சிற்றம்பலத்துள் ஆடல் புரிந்தருள்கின் ருன். இவ்வாறு குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டும் இறைவனது பேரருட்டிறத்தை,

" பிழைகொண் டொருவிக் கெடா தன்பு செய்யிற்

பிறவியென்னும் முழைகொண் டொருவன் செல்லாமை நின்

றம்பலத்தாடு முன்னேன் " (திருச். 65) எனவரும் திருப்பாடலில் அடிகள் உளமுருகிப் போற்றி யுள்ளார். பிழை-குற்றம். ஒருவுதல்-துறத்தல். கெடுத்தல்அழித்தல். ' பிழைகொண்டு, ஒருவிக், கெடாது' என்னும் தொடர்க்கு “ அடைந்தார் பிழைப்பின், தலையாயிஞர் பிழையை உட்கொண்டு அமைதலும், இடையாயினர் அவரைத் துறத்தலும், கடையாயினர் அவரைக் கெடுத்தலும் உலகத்துண்மையின் அம்மூவகையுஞ் செய்யாது ' எனப் பேராசிரியர் கூறிய விளக்கமும்,

" உவகைக் கண்ணிர் ஆருத ஆனந்தத் தடியார் செய்யும் அனசாரம் பொறுத்தருளி அவர் மேல்ென்றுஞ் சீருத பெருமானை ' (6–80–5) எனவரும் அப்பரடிகள் அருள்மொழியும் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாகும்.

நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி காணுங் காலைத் தலைமகள் தேஎத்து