பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

பன்னிரு திருமுறை வரலாறு


உழுவை - புலி. இதன்கண் தீவாய் உழுவை கிழித்தது எனத் தோழி கூறியதாக வரும் இத்தொடர், தனது கொடிய வாயைப் புலி அங்காந்தது' எனவும், ' புலியினது தீய வாயை வேருென்று கிழித்தது எனவும், புலியினது தீயவாய் பிறிதொன்றனைக் கிழித்தது' எனவும் இவ்வாறு மூவேறு வகையாகப் பொருள்படுதலால், இதனைக் கேட்ட தலைமகள் உள்ளத்திலே இவ்வழியே நம்மை நாடி வரும் நம் தலைவர்க்கு இப்புலியால் ஏதேனும் இடர் விளைந்ததோ ? என்னும் நினைவில்ை நடுக்கம் உண்டாயிற்று. அதனைக் குறிப்பினல் உணர்ந்த தோழி, ஆவா மணி வேல் பணி கொண்ட வாறின் ருெராண்டகையே எனக் கூறி, ஆடவருட் சிறந்தானுெரு வீரன் அப்புலியினைச் சிறிதே தப்புவித்துத் தன் கையிலுள்ள அழகிய வேற்படையால் அதனை வென் றடக்கிய திறம் மிகவும் வியக்கத்தக்கது என்பது தோன்றத் தலைமகளது நடுக்கத்தினை விரைந்து தீர்த்தாள் என அச்ச மும் உவகையும் ஒருங்கமைய அடிகள் இத்திருப்பாடலை அருளிச் செய்த திறம் வியந்து போற்றத் தக்கதாகும்.

ஆண்டகையாகிய தலைவன் இவ்வாறு தன் கையிலுள்ள வேற்படையால் வேங்கையை வீழ்த்தும் பெருவீரளுதலை,

சென்றெதிர்ந்த, வேங்கையின் வாயின் வியன் கைம் மடுத்துக் கிடந்தலற வாங்கயிலாற்பணி கொண்டது திண்டி றலாண்ட கையே '

(திருக்கோவை-245) எனவரும் திருப்பாடலில் அடிகள் புலப்படுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கதாகும்.

தலைமகன் நிலைமையினைத் தோழி கூறக் கேட்ட தலை மகள், பெருநாணினள் ஆதலால் அதனை அறியாதாள்போல வேருென்று கூறுவாளாய், அயலேயுள்ள கடலைச் சுட்டிக் காட்டி, தோழி, பலவாய்ப் பெரியவாகிய மரக்கலங்கள் மிகப் பெற்ற தொன்மை வாய்ந்த இக்கடல், தில்லைப்பெருமானை ஒத்துத் தோன்றுவதாகும் எனக் கூறுவதாக அமைந்தது, சங்கந் தருமுத்தி யாம்பெற வான் கழி தான் கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்க மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே

(திருக்கோவை-85) என்னும் திருப்பாடலாகும்.