பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 267

எனவரும் திருக்கோவையாகும். இதனை அடியொற்றி யமைந்தது,

சிலம்புஞ் சிறுநுதலும் சில்குழலும் பல்வளையும்

ஒருபாற்ருேன்ற அலங்கல ந் திண்டோளும் ஆடெருத்தும் ஒண்குழையும்

ஒருபாற்ருேன்ற விலங்கலருஞ்சுரத்து வேறுருவின் ஒருடம்பாய்

வருவோர்க்கண்டே அலங்கல விர்சடையெம் அண்ணல் விளையாட் டென்

றகன்றேம் பாவம். (தொல்-அகத்-40-நச்) எனவரும் மேற்கோட் செய்யுளாகும்.

தலைவன் வரைதல் வேண்டிப் பொருள் தேடச் சென்ரு ளுகத் தலைமகள் பிரிவாற்ருது தன்னெஞ்சொடு வருந்தக் கண்ட தோழி, மானினே எய்தற் பொருட்டு வில்லினை வளைத்த கொடுந் தொழிலாளராகிய கானவரும் அம்மானின் மருண்ட நோக்கத்தினை ஒத்ததென்று கருதித் தாம் வில்லிற் பொருத்திய அம்பினை எய்யாது மடக்கிக்கொள்ளும் மலையின ராதலால் தலைவர் நீ இவ்வாறு வருந்தும்படி தாமதித்திரார்; வரைதற்கு விரைந்து வருவர் ' என்று கூறி, அவளது வருத்தத்தைத் தீர்ப்பதாக அமைந்தது,

கானமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையா மானமர் நோக்கியர் நோக்கென மானற் ருெடை மடக்கும் வானமர் வெற்பர் வண்டில்லையின் மன்னை வணங்கலர் போற் றேனமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல்

திருநுதலே, (274) எனவரும் திருக்கோவையாகும். இத்திருப்பாடலில் கான வரது இயல்பாக அடிகள் குறித்தருளிய அன்பின் செயலை நன்குணர்ந்த நக்கீர தேவர், தாம் பாடிய திருஈங்கோய் மலை யெழுபதில்,

எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக் கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ என்கின்ற பாவனை செய் ஈங்கோயே தூங்கெயில்கள் சென்றன்று வென் ருன் சிலம்பு. (12) எனவரும் திருப்பாடலிற் சொல்லோவியஞ் செய்து காட்டிய திறம் இங்கு ஒப்புநோக்கி யுணர்தற்குரியதாகும்.

இத்திருக்கோவையிற் பொருள் புலப்பாட்டிற்கு இன்றி யமையாத சிறந்த உவமைகள் பலவற்றை அடிகள் எடுத்து