பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை

ஆகிய திருத்தலங்கள் திருவாதவூரடிகளால் குறித்துப் போற்றப்பெற்றுள்ளன.

இறைவன், கயிலையையெடுத்த இராவணனைத் தன் திருவடிப் பெருவிரலொன்றில்ை ஊன்றி மலைக்கீழ் அடர்த் தருளியது, காமனை எரித்தது, காலனேக் காய்ந்தது, சலந் தரனைத்தலை யரிந்தது, தக்கன் வேள்வி சிதைத்தது. அவ் வேள்வியிற் சூரியன் பற்களைத் தகர்த்தது, பகன் என்னும் ஆதித்தனது கண்ணைக் குருடாக்கியது. மேருவை வில்லாக வளைத்தது, திரிபுரம் எரித்தது, அயனைச் சிரங்கொய்தது.' ஆலகால நஞ்சினையுண்டு மிடற்றிலடக்கியது, யானையை யுரித்தது’ ஆகிய வீரச் செயல்களையும், முருகவேள் சூர பதுமனை அழித்தருளியது, திருமால் பிரமர் அடிமுடி தேடியது, திருமால் ஆயிரங்கைகளால் ஆயிரந்தாமரை மலர்களைக் கொண்டு நாள்தோறும் சிவபெருமானை அருச்சனை புரிந்தது. ஒருநாள் ஆயிரமலர்களுள் ஒன்று குறையத் தன் கண்ணைத் தோண்டி மலராக இறைவனடியிற் சாத்திச் சக்கரப்படையினைப் பெற்றுக்கொண்டது. உலக ளந்தது, ஆலிலையிற் பாலகளுகத் துயில்கொண்டது." கண்ணனுகி நப்பின்னையை மணந்துகொண்டது, திருமால் நரசிங்கமாக வந்தது20 ஆகிய புராணச் செய்திகளையும் அடிகள் திருக்கோவையிற் குறித்துள்ளார்.

இத்திருக்கோவையில் ஆகம நூற் பொருள்களை அடிகள் எடுத்துக்கூறியுள்ளார் எனவும் அவற்றுள் தம் உளங்கொண்ட சிலவற்றையே தாம் உரையிற் குறிப்பதாக வும் பேராசிரியர் இந்நூல் உரை முகத்துக் கூறியுள்ளமை முன்னர் விளக்கப்பெற்றது. சிவபெருமானுடன் பிரிவற ஒன்ருயுள்ள பராசத்தியை யாவையுமாம் ஏகம் ` என 71-ஆம் திருப்பாடலிலும், பிறத்தற்குக் காரணமாகிய மலங் கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே வினை

(1) திருக்கோவையார் 59, 383. (2) 61, 70, 90, 95, 164, 179, 313, 352, 364, 367. (3) 150, 227, 286. (4) 209. (5) 4, 60, 92, 168, 184, 226, 234, 270. (6) 4, 60. (7) 184, 270. (8) 26, 98, 114, 152, 174, (9) 13, 18, 36, 55, 133, 137, 142, 167, 190, 213, 321, 357, 371, 372. (10) 321, 371. (11) 22, 27, 81, 158, 329. (12) 15, 55. (13) 285. (14) 86, 105, 107, 287. (15) 180. (16) 153, 163, 180, 230. (17) 42, (18) 105. (19) 273, (20) 225,