பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 13

ளுக்கும் உயர்ந்த ஆடைகளைப் பரிசாக வழங்கிஞன், வீரர் கள் அவற்றை வாங்கித் தலைமிசைத் தரித்துக் கொண் 瑟_雳*喀g蕾”。

குதிரைச் சேவகளுய் வந்த இறைவன், பாண்டியன் பால் விடைபெற்றுப் புறப்பட்டான். அப்பொழுது வாத ஆரடிகள் இறைவர்க்கு முன்னே சென்று அவருடைய திரு. வடிகளைப்பற்றிக் கொண்டு பிடித்த பத்து என்னும் பனு வலைப் பாடிப் போற்றினர். இறைவன், அடிகளை நோக்கி நேசமிக்க முனிவ, நினது நினைவினை இங்கு வந்து முடித் தோம். பாதத்தை விடுக என்று சொல்லிப் புறப்பட்டுப் போயினன். அன்று குதிரையீடு கண்டவர்களெல்லாம் இது போல்வதொரு காட்சியை முன்பு கண்டிலோம் எனக் கூறிப் பேரானந்தக் கடலில் திளைத்தார்கள். பாண்டியன் வாதவூரர்க்குப் பொற்பட்டம் முதலிய வரிசைகளை நல்கி அவர் தம் மாளிகைக்குச் செல்லுமாறு விடை கொடுத்தனுப்பி விட்டுத் தனது அரண்மனையை யடைந்தான். குதிரைச் சாத்தின் தலைவனுக வந்த சிவபெருமானும், உடன் வந்த வீரர்களாகிய சிவகணங்களுடன் மறைந்து திருவாலவாய்த் திருக்கோயிலை யடைந்தருளினுள்.

குதிரைத்துறைக் காவலர், புதியனவாக வந்த குதிரை களைப் பந்திகளில் நிரல்படக் கட்டி அவற்றுக்குக் கருப்புக் கட்டியொடு கலந்த கொள், பயறு, துவரை முதலிய இனிய உணவுகளைக் கொடுத்தும் அவை அயின்றில. மாயக் குதிரைகளாகிய அவை, அன்று நள்ளிரவிலே ஒன்றை யொன்று முகம் பார்த்து, ' நாம் நேற்று நன்ருக அடிபட்டதுமன்றிக் கழுத்திலும் காலிலும் கயிற்ருந் கட்டுண்டோம். இனி இங்கு நிற்போமாஞால், குருதி நீரொ ழுகப் புண்படுவோம். நமக்கு வேண்டாத கொள்ளும் புல்லும் உணவாக இட்டு மனிதர்கள் நம்மேல் தொற்றுவர். விடியு முன் தம்முருவத்தைக்கொண்டு இவ்விடத்தை விட்டு தழுவி விடவேண்டும் ' என்று சொல்லிக் கழுத்திற் கட்டிய கயிற் றைக் கடித்தெறிந்து பண்டை நரிகளாக உருமாறின. நரிக ளாகிய அவை, அங்குக் கட்டப்பட்டிருந்த பழைய குதிரை களைக் கடித்துக்கொன்று அங்கிருந்து புறப்பட்டுக் கடைவீதி களிலும் மாடமாளிகை திருமடம் முதலியவற்றின் முற்றங் களிலும் திரள்திரளாய்ச் சென்று ஊளையிட்டு ஓடின. ஊர் மக்கள் விழித்தெழுந்தனர். பரித்துறைக் காவலர் என்ன.