பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

பன்னிரு திருமுறை வரலாறு


சுத்த சாக்கிரத்தானமே குறிஞ்சி நிலம் : சுத்த சொப்பனத்தானமே பாலைநிலம்; சுத்த சுழுத்தித்தானமே முல்லைநிலம்; சுத்த துரியத்தானமே மருத நிலம்; பரசிவ வின்ப சுகாதீதமே நெய்தல் நிலம். இப்படி ஐந்து நிலங் களும் சுத்தாவத்தைத் தானங்களாகவும், பஞ்ச சத்தி அதிட்டானத் தானங்களாகவும் காண்க '

என விளக்கங்கூறித் திருக்கோவையிலுள்ள இருபத் தைந்து கிளவிக் கொத்திற்கும் நானூறு துறைகளுக்கும் துறையன்பு முதிர்ச்சி என்னும் நூற்பாக்களையும், பேரின்ப நிட்டையன்பு விலாசம் என்னும் கொளுக்களையும் நமச்சிவாய வாழ்க என்ற பத வியாக்கியானத்தில் எடுத்துக் காட்டி யுள்ளார்.

இப்பகுதி, திரு. சுவாமிநாத பண்டிதர் அவர்கள் பதிப் பித்த திருக்கோவையா ருண்மை என்ற நூலிலும், இதன் கருத்து திரு. விசாகப்பெருமாளேயர் அவர்கள் வெளியிட்ட திருக்கோவையார் உண்மைக் கருத்து என்ற பகுதியிலும் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன.

“ இனிப் பேரின்பப் பொருள்தான் ஒத்த கிழவனும் கிழத்தியுந் தம்முள் அஃகா உழுவலன்பான் நுகர்ந்து போதரும் சிற்றின்பம்போல்வ தொன் ருகலின், மற்றது சிற்றின்பம் அகனைந்தினைபற்றி நிகழ்தல்போலக் குருதரிசன முன்னுன நின்மல சாக்கிராதி யைந்தும்பற்றி நிகழுநீரதாம். அங்ங்னம் நிகழ்வுழிப் பேரின் பக்கிழத்தி சிற்றம்பலமும், கிழ வோன் முத்தான்மாவும் ஆம் ' எனச் சபாபதி நாவலரவர்கள் மேற்குறித்த கருத்தினையே சிறிது மாற்றிக் கூறியுள்ளார்.

திருச்சிற்றம்பலக் கோவைக்குப் பேரின் பப் பொருள் பற்றி யமைந்த இவ்விளக்கங்கள் திருக்கோவையார்க்கு உரை வரைந்த பேராசிரியர் காலத்தில் வழங்கியிருக்கு மாயின், இவற்றை அவ்வாசிரியர் தமது உரையில் தெளி வாகக் குறித்திருப்பார். அத்தகைய குறிப்பெதுவும் அவரது உரையிற் காணப்படாமையால், பேரின் பத்துறை பற்றிய இவ்விளக்கம் மிகப் பிற்காலத்தறிஞ ரொருவரால் இயற்றப் பட்டதெனத் தெரிகிறது.

சரியை கிரியை யோகம் ஞானம் எனச் சைவசித்தாந்தம் கூறும் நால்வகை நெறிகளுள், நான்காவதாகிய ஞான நன் னெறியானது, எல்லாம்வல்ல முதல்வனை ஆன்ம நாயகளுக