பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

பன்னிரு திருமுறை வரலாறு


திருவெண்காட்டடிகள் வாய்மொழியால் இனிது விளங்கும். திருந்திய அன்பு என்பது, இறைவனைத் தந்தையாகவும் தன்னை மகளுகவும், இறைவனை ஆண்டாளுகவும் தன்னை அடிமையாகவும், இறைவனை நண்பனுகவும் தன்னைத் தோழவுைம் இவ்வாறு பல படியாக வழிபட்டு வளர்ந்து, பின் இறைவனைத் தன் ஆருயிர் நாயகனுகவும் தன்னை அவனருள் விழைந்த பெண்ணுெருத்தியாகவும் கருதித் தன் செய லற்றுத் தான் என்பது அற்று அவன்தன் செயலேயாக அடங்கி நின் ருெழுகும் நிலையிற் செலுத்தப்பெறும் பேரன் பாகும். இம்முறையில், திருவாதவூரடிகள், தம்மையாட் கொண்டருளிய சிவபெருமானை ஆருயிர்நாயகளுகவும் தம்மை அவனது அருளாரின் பத்திற்கு ஏக்கற்று நிற்கும் பெண்ணுெருத்தியாகவும் கருதி அன்பு செலுத்தியவர் என் பது, மேற்குறித்த திருவெண்காட்டடிகள் வாய்மொழியால் நன்கு துணியப்படும். அன்றியும் ' புலியூரம்பலவர்க்குற்ற பத்தியர்போலப் பணைத்திறுமாந்த பயோதரத்தோர், பித்தி தன்பின்வர முன்வருமோ வொர்பெருந்தகையே (242) எனவரும் திருக்கோவையில் பத்தியராகிய அடியார்களைத் தலைவிக்கும் அம்பலவனைத் தலைவனுக்கும் உவமித்து அடிகள் கூறியிருத்தலும், புலியூர், ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத் தருவனசெய்து எனது ஆவிகொண்டு ஏகி, என்னெஞ்சில் தம்மை, இருவினகாதலர் ஏதுசெய்வான் இன்று இருக்கின்றதே (281) எனத் தலைமகள், தன்னை அடியவரோடும் தன் காதலனுகிய தலைவனை இறைவளுேடும் உவமித்துரைப்பதாக அடிகள் கூறியிருத்தலும், இறைவனை நாயகனுகவும் தம்மை அவனருள் விழைந்த பெண்ணுகவும் கருதி அடிகள் அன்புசெய்த திறத்தினை நன்கு வலியுறுத்து

வனவாகும்.

ஆகவே, அருளாசிரியர் அருளிய அருள் நூல்களில் அமைந்த அகப்பொருள் துறைகளுக்கு இறைவனைத் தலைவியாகவும் ஆன்மாவைத் தலைவனுகவும் கொண்டு விளக்கம் கூறும் முறையில் இத்திருக்கோவைத் திருப்பாடல் களுக்குப் பேரின்பப்பொருள் கூறுதல், அகப்பொருளொழுக லாருகிய தமிழிலக்கண மரபுக்கும் சைவசித்தாந்தவியல்பாகிய சமய மரபுக்கும் சிறிதும் ஒவ்வாததாகும். அன்றியும் திருக் கோவையாருரையிற் பேராசிரியர் 'அறிவனுாற் பொருள் என்றது, ஆகம நூல் வழியின் நுதலிய ஞானயோக நுண்