பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகமும் கோவைத் திருவாசகமும்

முத்திநெறியாகிய பேரின்பநிலையை அடைவதற்குச் சாதனமாகிய பத்திநெறியின் இலக்கியமாகத் திகழ்வது திருவாசகம் என்பதும், உலகியல் வாழ்வுக்கு இன்றியமை யாத இன்ப அன்பினை வளர்க்கும் அகத்திணை யொழுக லாற்றை விரித்துரைக்கும் வாயிலாகப் பத்திநெறியின் பயணுகிய பேரின்ப வாழ்வின் பெற்றியினை உய்த்துணர வைப்பது திருச்சிற்றம்பலக்கோவை என்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. இத்திருக்கோவையில், பாட்டுடைத் தலைவனுகிய தில்லைச் சிற்றம்பலவனைப் பரவிப் போற்றுவன வாக அமைந்த பகுதிகள் யாவும், அம்முதல்வனது பொருள் சேர் புகழ்த்திறத்தினை விளக்குவனவாய்க் கற்போர் நெஞ்சத் தைக் கசிந்துருகச் செய்வனவாம். திருக்கோவையிலுள்ள இப்பகுதிகள் திருவாசகத்தின் சொற்பொருள் நடையினை அடியொற்றியமைந்துள்ளமை பின்வரும் ஒப்புமைப்பகுதி களால் இனிது புலம்ை. பின்வரும் தொடர்களில் முன் னுள்ள எண்கள் திருக்கோவையார் பாடல் எண்களாகும். பின்னுள்ளவை திருவாசகப் பாடல்களுக்குரிய எண்களாகும்.

4 அடையார் புரங்கள், இகல்குன்ற வில்லிற் செற்ருேன்

தில்லையீசன் எம்மான் எதிர்ந்த, பகல்குன்றப் பல்லுகுத்தோன்.

60 பல்லிலளுகப் பகலை வென்ருேன் -

அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல் தகர்த்து

திருவம்மானை -15

67 மறந்து மற்றைப், பொய்வான வரிற் புகாது தன் பொற் கழற்கே

அடியேன், உய்வான்புக ஒளிர்தில்லை நின் ருேன். அத்தேவர் அவர் தேவ ரென்றிங்ங்கன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்று தாய் கோத்தும்.பீ.

-திருக்கோத்தும் பி-5

71. யாவையுமாம் ஏகத்தொருவன்.

ஏகனனேக னிறைவனடி வாழ்க - சிவபுராணம்