பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியமும் திருக்கோவையாரும்

திருவாதவூரடிகள், தொல்காப்பியம், இறையனுர் களவிய லுரை ஆகிய தமிழியல் நூல்களையும் சங்கச் செய்யுட்கள் திருக்குறள் முதலிய செந்தமிழிலக்கியங்களையும் நன்கு தேர்ந்து, தமிழியல் வழக்கமாகிய அகப்பொருளொழுகலாறு இத்தன்மையது என யாவரும் உணர்ந்து மகிழும்வண்ணம் அகத்திணைக் கோவையாகிய இத்திருக்கோவையை அருளிச் செய்துள்ளார். ஆகவே அடிகள் பாடியருளிய திருச்சிற்றம் பலக் கோவையில் அவர்க்கு முற்பட்ட செந்தமிழ்ச் சான்ருே ராகிய தொல்காப்பியனுர், திருவள்ளுவர், கபிலர், ஒளவை யார் முதலிய புலவர் பெருமக்களின் கருத்துக்களும் சொற் ருெடர்களும் பொன்னேபோற் போற்றி எடுத்தாளப் பெற் றிருத்தல் காணலாம். மதுரைத் திருவாலவாய்த் திருக் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் கூடலம்பதியில் நிறுவப்பெற்ற தமிழ்ச் சங்கத்திலே தானும் ஒரு தமிழ்ப் புலவராக வீற்றிருந்து தமிழாராய்ந்தருளிய அருள் நிகழ்ச்சியை அடிகள் இத்திருக்கோவையிற் குறித்துள்ளமை முன்னர் விளக்கப் பெற்றது. சிற்றம்பலத்தும் என் சிந்தை யுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறை' என அடிகள்,தமிழ்நூற் பரப்பினை ஞானப் பொருளாய் நின்ற இறைவனல் ஆராயத்தக்க ஆழமும் பரப்பும் உடையதாகக் குறித்தலால், சங்கத்தமிழ் நூல்களில் அடிகள் கொண்டுள்ள நன்மதிப்பும் ஆழ்ந்த புலமையும் இனிது விளங்கும்.

மகளிர்க்கு உயிரைக் காட்டிலும் நானம் சிறந்தது ; அத்தகைய நாணத்தினும் கற்புச் சிறப்புடையது என்னும் முன்னேர் மொழியைத் தலைமகள் தனது உள்ளத்துட் கொண்டு தலைவன் இருக்கும் இடத்தினை அடைய நினைத்தல் இயல்பு. கற்புடை மகளிர்க்குரிய இவ்வியல்பினை,

' உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவ னுள் வழிப் படினும் ' (தொல் களவியல்-28)