பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் நூற்பாவில் ஆசிரியர் தொல்காப்பியனர் விரித்துக் கூறியுள்ளார். தலைமகளது உள்ளத்தமைந்த கற்புநலம் பற்றிய இக்கருத்தினை,

தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந் நாண் தகைசால் வேயிற் சிறந்தமென் தோளிதன் கற்பின் விழுமிதன்று ; ஈங் கோயிற் சிறந்து சிற்றம்பலத் தாடும்எம் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே. (திருக்-204) எனவரும் திருப்பாடலில் அடிகள் விரித்துக் கூறியுள்ளார்.

தலைமகனைப் போக்குஉடன்படுத்திய தோழி, தலைமகள் பாற் சென்று, மகளிராற் பாதுகாக்கப்படுவனவற்றுள் நாணத்தையொத்துச் சிறந்த பொருள் பிறிதொன்றில்லை. அத்தகைய நாணமும் கற்புப்போல அத்துணைச் சிறப்புடைய தன்று' என உலகியல் கூறுவாள் போன்று தலைமகள் உடன் போக்கிற்கு உடன்படுமாறு கற்பின் நலத்தினை வற்புறுத்து வதாக அமைந்தது மேற்காட்டிய திருப்பாடலாகும் இதன் கண் வரும் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த என்ற தொடர்க்கு, ' உயிரினுஞ் சிறந்தன்று நானே நாணி னுஞ் செயிர்தீர்காட்சிக் கற்புச் சிறந்தன்று என்ருராகலின், தாய்போல நாண் சிறத்தலும் நாணினும் கற்புச் சிறத்தலும் ஆகிய இரண்டும் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த நூல்கள் இடத்துச் சிறப்புடைய பொருள் என்று உரைப்பினும் அமையும்" எனப் பேராசிரியர் விளக்கம் கூறுவர். இவ் விளக்கத்தினைக் கூர்ந்து நோக்குங்கால், கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதி' எனப்படும் அறிவு நூல்களுள் ஆசிரியர் தொல்காப்பியனர் இயற்றிய தொல்காப்பியமும் ஒன்ருகும் எனத் திருவாதவூரடிகள் இத்திருப்பாடலிற் குறித்துள்ளமை நன்கு புலம்ை. ஒருநாட் பழகி யுயிரிற் பிரியாதுடன் வளர்ந்த அருநாண் ' (திருக்கோவை-44) எனத் தலைமகள் கூற்றில் வைத்து உயிரினுஞ் சிறந்த நாணின் சிறப்பினை அடிகள் விளக்கிய திறம் இங்கு நினைத்தற்குரியதாகும்.

எல்லாவுயிர்க்கும் இன்பத்துன்பத்திற்குக் காரணமான இருவினையையும் வகுத்து நுகர்விப்பவன் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனுகிய முழுமுதற்பொருளே என்பது, பால்வரை தெய்வம்’ (தொல்-கிளவி-57) எனவரும் தொல் காப்பியத் தொடரால் அறியப்படும். பால்வரை தெய்வம் என்னும் இத்தொடர், பால் வேறு, அதனை வரைந்து நுகர் விக்கும் தெய்வம் வேறு என்னும் மெய்ம்மையினைப் புலப்