பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையனர் களவியலுரையும் திருக்கோவையாரும்

மணிவாசகப் பெருமான் இறையனர் களவியலுரை யினை இலக்கணமாகக்கொண்டு திருச்சிற்றம்பலக்கோவை யென்னும் அகப்பொருளிலக்கியத்தினை இயற்றியுள்ளார் என்பது, களவியலுரையில் வரும் அகப்பொருட்டுறை களையும் உரைத்தொடர்களையும் கருத்துக்களையும் அவ்வாறே இத்திருக்கோவையில் அடிகள் எடுத்தாண்டிருத்தலால் இனிது புலம்ை.

பொருவிறந்தாராகிய தலைமகனும் தலைமகளும் தத்தம் ஆயத்தின் நீங்கித் தமியராய் ஒரு பொழிலகத்து எதிர்ப்படு தற்கு, அவ்விருவரையும் இப்பிறப்பில் ஒன்றுவிக்கும் நல்லூழே காரணமாதலை விளக்கிய களவியலுரையாசிரியர், வேறு வேறிடங்களிற் பிறந்து வளர்ந்தாராகிய அவ்விரு வரும் ஓரிடத்து எதிர்ப்பட்ட தன்மையை, " வடகடலிட்ட ஒரு நுகம் ஒரு துளை, தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற் போலவும் .... தலைப்பெய்து ஒருவர் ஒருவரைக் காண்டல் நிமித்தமாகத் தமியராவர் ' என உவமை கூறி விளக்கியுள்ளார். களவியலுரையாசிரியர் கூறும் இவ்விளக் கத்தை அடியொற்றி அமைந்தது.

வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வானுகத்தின் துளை வழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல்லோன்

கயிலைக் கிளைவயி னிக்கியிக் கெண்டையங் கண் ணியைக்

கொண்டு தந்த விளைவையல் லால்விய வேன் நய வேன் தெய்வ

மிக்கனவே (6)

எனவரும் திருக்கோவையாகும். களவியலுரையாசிரியர் பொதுவாக வடகடல், தென்கடல் எனக்குறித்தாராயினும் அவ்வுவமையினைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் கீழ்கடல், மேல்கடல் என அடிகள் மாற்றி யமைத்த நுட்பம் அறிந்து மகிழ்தற்குரியதாகும்.

தலைமகனும் தலைமகளும் ஒருவரை யொருவர் எதிர்ப் பட்டுக் காணுங்கால் தம் உணர்வினரல்லராதற் றன்மையை

19