பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

பன்னிரு திருமுறை வரலாறு


அங்ங்னங் காணுதற்கு முன்னரே பெற்றுடையர் என விளக்க எண்ணிய களவியலுரையாசிரியர், " ஏகுதி மோதிரஞ் செறித்த திருவுடையான் ஒருவன் ஏளுதி மோதிரஞ் செறிக்கும் அத்திரு, அவன் செறிக்கின்ற பொழுதே உண்டாயிற்றன்று ; முற்கொண்டு அமைந்து கிடந்தது. அது பின்னை ஒரு காலத்து ஓரிடத்து ஒரு காரணத்தான் எய்துவிக்கும். அது போலே இன்ன நாள் இன்ன பக்குவத்து இன்னபொழுது இன்ன இடத்து இவள் காரணமாக இவன் தன்னுணர்வினன் அல்லளும் என்பது உம், இவன் காரணமாக இவள் தன்னுணர்வினள் அல்லளாம் என்பது உம் முன்னே முடிந்து கிடந்தன. அது பின்னுங் கொணர்ந்து எய்துவிக்கும் ' என எடுத்துக் காட்டுத் தந்து விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தின் சிறப் பினை உளங்கொண்ட திருவாதவூரடிகள், தாம் இறைவனல் ஆட்கொள்ளப்படுதற்கு முன்பே, தம்மை அடியவளுக ஆட்கொண்டருளுதல் வேண்டும் என்னும் நியதியை இறை வன் தனக்குரியதொரு முறைமையாகக் கொண்டுடையான் என்பதுபட,

என்னை முன் ஆள் ஊழுடையான் (திருக்கோவை - 7) எனத் தம்மை ஆண்டுகொண்டருளிய இறைவனை உளங் கசிந்து போற்றுகின்ருர், குருவாக எழுந்தருளிய இறை வனைத் தாம் எதிர்ப்பட்டு அம்முதல்வனுக்குத் தாம் அடிமைப் படுதற்கும் அம்முதல்வன் தம்மை அடிமையாக ஏற்று ஆண் டருளுதற்கும் அமைந்த திருவருள் முறைமையினைப் புலப் படுத்தும் நிலையில் அமைந்தது, ' என்னை முன் ஆள் ஊழு டையான் என்னும் இத்தொடராகும். முன் என்னை ஆள் ஊழுடையான் என்பதற்கு, எனக்கு ஆட்படுந்தன்மை உண்டாவதற்கு முன்னே என்னை ஆள்வதொரு புதிதாகிய முறைமையையுடையான் ' எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு நோக்கத்தக்கதாகும்,

அன்பி னைந்திணைக் களவு (களவியல் - 1) என இறையனர் குறித்தவாறு, திருவாதவூரடிகள், தாம் அன்பின் ஐந்திணைக் களவொழுக்கத்தினைப் பொருளாகக் கொண்டு பாடியருளிய இத்திருக்கோவையின் முதற் பாடலில், நூல் நுதல் பொருளாகிய அகனைந்திணை யொழுகலாற்றினை ஒரு மாலையாகக் கொண்டு உருவக அணியமையக் கூறியுள்ளார்.