பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 239

யாங்கள் வேங்கை மலரையன்றித் தெய்வத்திற்குரிய மலரைச்சூடுதற்கு அஞ்சுகின்ருேம். ஆதலால் இக்கண்ணி எம் குலத்திற்கு இசையாது ' எனத் தலைமகனை நோக்கி மறுத்துக் கூறுவதாக அமைந்தது.

நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகம் நண்ணி மறமனை வேங்கை யெனநனியஞ்சு மஞ்சார் சிலம்பா குறமனை வேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ நிறமனை வேங்கை யதளம் பலவ னெடுவரையே.

(திருக்கோவை - 96)

என்னுந் திருப்பாடலாகும். இதன்கண் வேங்கை மலர் களால் மூடப்பெற்று மறைந்த பாறை, புலியினை யொத்துத் தோன்றியது என்னும் இவ்வுவமை,

‘கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளையிற் ருேன்றும் காட்டிடை (47)

எனவரும் குறுந்தொகைச் செய்யுளிற் குறிக்கப்பெற்றுள் ளமை காணலாம். ' உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை ' (கலித்தொகை 38) என்பதும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாகும்,

தான் வேண்டிய இரவுக்குறியினை வழியருமை கூறித் தோழி மறுத்தாளாக, அதுகேட்ட தலைமகன், அடைதற்கு அரியளாகிய தலைவியை விரும்பி நீ மெலிகின்ருய். இதற்கு யான் ஆற்றேன்' எனத் தன்னெஞ்சிற்குக் கூறி வருந்துவ தாக அமைந்தது,

மாற்றே ன்ென வந்த காலனை ஓலமிட வடர்த்த கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றி

னிள் குடுமி மேற்றேன் விரும்பு முடவனைப் போல மெலியுநெஞ்சே ஆற்றே னரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே, (150) எனவரும் திருக்கோவையாகும். இச்செய்யுளில்,

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் உட்கைச் சிறுகுடைக் கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கியாங்கு ' (குறுந்தொகை - 60)

எனத் தலைமகள்கூற்றில் வந்த உவமையைத் தலைவன் கூற்றிற்கேற்ப அடிகள் மாற்றி யமைத்திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.