பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

பன்னிரு திருமுறை வரலாறு


யின் நன்மை குறித்து நின்ற்ை) செய்தற்கு அரியது யாதுளது?’ எனத் தலைவனை நோக்கித் தோழி வினவு கின்ருள். இத்திருப்பாடல்,

" கோழிலை வாழைக் கோண் முதிர் பெருங்குலை

ஆழுறு தீங்கனி புண் ணு நர்த் தடுத்த சாரற் பலவின் சுளையோ டுழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியா துண்ட கடுவன், அயலது கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது நறுவி யடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா வின்பம் எளிதின் நின் மலைப் பல்வேறு விலங்கும் எய்தும் நாட, குறித்த வின்பம் நினக் கெவன் அரிய ... ... ... ... ... ... ... ... ... பைம்புதல் வேங்கையும் ஒள்ளினர் விரிந்தன நெடுவெண்டிங்களும் ஊர்கொண்டன்றே (அகம் -2.) எனவரும் கபிலர் பாடலை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். கடுவன் - ஆண்குரங்கு. " கடுவனனது தேனை அறியாது நுகர்ந்து, பின்பு தனது தொழிலாகிய மரமேறுதலும் செய்யமாட்டாது, தனக்கு அயலதாகிய சந்தனத்தின் நிழலிற் பூமேலே உறங்குகின்ருற்போல, நீயும் இக்களவொழுக்க மாகிய இன்பம் நுகர்ந்து நினது தொழிலாகிய அறநெறியையுந் தப்பி, இக்களவினை நீங்கி வரையவு மாட்டாது. இக் களவொழுக்கமாகிய இன்பத்திலே மயங்கா நின்ருய் ' என்பது மேற்குறித்த அகப்பாட்டில் அமைந்த உள்ளுறையாகும். இதன்கண் பலவின் தேனை அறியாது பருகிக்களித்து மயங்குதலாகிய செயல், கடுவனுக் குரியதாகக் கூறப்பட்டிருக்கவும், திருவாதவூரடிகள் அச் செயலை மந்திகளுக்கு உரியதாக மாற்றியமைத்துள்ளமை கூர்ந்து நோக்கற் பாலதாகும். நின்மலைக்கண் வாழும் உணர்வில்லாத தாழ்ந்த விலங்கினத்தனவாகிய பெண் குரங்குகளும் இத்தன்மைத்தாகிய தேனை நிறையப் பருகித் தம்மைமறந்து இன்பவாழ்க்கையில் திளைத்தனவாய் மகிழா நிற்கவும் நின்னுற் காதலிக்கப்பெற்று நின்னுயிரிற்சிறந்தா ளாகிய தலைமகள் நின்னை மணந்து நின்மனைக்கண் இருந்து மகிழும் இன்பநிலையினை எய்தப் பெருமல் நின் பிரிவினுல் தனித்து வருந்த நீ இங்ங்ணம் களவொழுக்கத்தில் நீட்டித்து ஒழுகுவது அடைந்தார்ப் புரக்கும் நினது அருட்பண்பிற்குச் சிறிதும் ஏற்புடையதன்ரும் எனத் தோழி தலைமகனை