பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை 305

நோக்கி விரைவில் மணந்துகொள்ளுமாறு வற்புறுத்தினுள் என்பதனை அறிவுறுத்தும் நோக்கத்தினலேயே அடிகள் இவ்வாறு மாற்றியமைத்துள்ளார் எனக் கருதவேண்டியுளது. இந்நுட்பம், " நின்மலைக்கண் விலங்குகளும் இத்தன்மைத் தாகிய தேனைக் குறியாதுண்டு இன்புருநின்றன வாகலின், குறித்தவற்றின் நினக்கு அரியாது யாது? இதுவன்ருே பருவமும் என வரைவு பயப்பக் கூறியவாறு” என இத்திருக் கோவையுரையிற் பேராசிரியர் கூறும் விளக்கத்தால் இனிது புலனுதல் காணலாம்.

வரைவுடம்படாமையின் தோழி தலைமகளுேடு புலந்து கூறக்கேட்ட தலைமகள், அக்குறிப்பறிந்து, ' கார்காலத்து மயிலை யொப்பாய், சிற்றம்பலவராகிய இறைவரை அடையா தாரைப் போன்று வருந்தச் சிங்கமானது கொல்லும் ஆண் யானையினைச் சென்றணுகாதவாறு பெண்யானை அவ்விரண் டற்கும் இடையே சென்று புகும் கல் நிரம்பிய வழியிலே நீர் வந்தவாறு என் ? என்று வினவுவாரைப் பெற்றேமாயின், கரடியானது குரும்பியாகிய உணவு காரணமாகப் பாம்புப் புற்றினை அகழா நிற்கும் நள்ளிருளிலே அத்தலைவர் இருந்த இடத்திற்குச் செல்லுதல் அரிதன்று எனத் தோழிக்குக் கூறுவதாக அமைந்தது,

வல்சியி னெண்கு வளர்புற் றகழ மல்கும் மிருள்வாய்ச் செல்வரிதன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர் போற் கொல்கரிசீயங் குறுகா வகை பிடிதானிடைச்செல் கல்ல தரென்வந்த வாறென்பவர்ப்பெறிற் கார்மயிலே ' (264) எனவரும் திருக்கோவையாகும். இஃது, ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குரும்பி வல்சிப் பெருங்கை யேற்றை தூங்கு தோற் றுதிய வள்ளுகிர் கதுவலிற் பாம்பு மதனழியும் பாளுட் கங்குலும் அரிய வல்லம னிகுளே, பெரிய கேழலட்ட பேழ்வாயேற்றை பலாவம லடுக்கம் புலர வீர்க்கும் கழைநரல் சிலம்பி ளுங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் ண சும்பிற் படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலியப் பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பு மவர்நாட் டெண் ணரும் பிறங்கல் மானதர் மயங்காது

மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெலத்

20