பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

பன்னிரு திருமுறை வரலாறு


துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால் சிறுபுறம் புதைய வாரிக்குரல் பிழியூஉ நெறி கெட விலங்கிய நீயி ரிச்சுரம் அறிதலு மறி திரோ என்னுநர்ப்பெறினே (8) என்னும் அகநானூற்றுச் செய்யுளைப் பின்பற்றி அமைந்த தாகும்.

தலைவன் வரைபொருட்பிரிய ஆற்ருளாகிய தலைமகள், தனக்கு ஆறுதல் கூறி வற்புறுத்தும் தோழியை நோக்கி, ஆற்ருமையால் வருந்திக் கூறுவதாகவுள்ளது,

வந்தாய் பவரையில்லா மயின் முட்டை யிளையமந்தி பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண்போ வினிதே கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன் றென்றில்லை

தொழார் குழுப்போற் சிந்தாகுலமுற்றுப் பற்றின் றி நையுந் திருவினர்க்கே. (276, எனவரும் திருக்கோவையாகும். "கொத்துக்களாகப் பொருந் திய நறுமணம் வாய்ந்த கொன்றைமலரையணிந்த கூத்தப் பெருமானுக்குரியதாய்த் தென்றிசைக்கண் அமைந்த தில்லைச் சிற்றம்பலத்தை வணங்காதார் ஆகிய குழுவினை யொத்து மனக்கலக்கத்தையுற்றுத் தமக்கு ஓர் பற்றுக்கோ டின்றி வருந்தும் திருவினையுடையார்க்கு, சென்று ஆராய்ந்து பேணுவாரில்லாத மயிலின் முட்டையினை இளைய பெண் குரங்கு பந்தாடி விளையாடும் பெரிய பொழிலையும் பக்க மலைகளையும் உடைய நாட்டையுடைய தலைவனது இயல்பு இனிமையுடையதாகும்” என்பது இதன் பொருள். இதன்கண் நையுந் திருவினர்க்கு ' என்றது, வருந்துமளவு இறந்துபடாது உயிர்தாங்கி யிருந்து, அவனது தலையளி பெற்றபொழுது இன்புறும் நல்வினையையுடைய மகளிர்க்கு என்றவாறு. எனவே, யான் அத்திருவினைப் பெற்றிலேன் எனத் தலைவி கூறினுளாயிற்று.

உற்றது ஆராய்ந்து ஒம்புவார் இல்லாத மயிலினது முட்டையால், ஈன்ற வருத்தமறியாத இளமந்தி, மயிலின் வருத்தமும் முட்டையின் மென்மையும் பாராது. பந்தாடு கின்ருற்போல, காதலரான் வினவப்படாத என் காமத்தை நீ இஃது உற்றறியாமையின், எனது வருத்தமும் காமத்தினது மென்மையும் பாராது, இவ்வாறு உரைக்கின்ருய் % என உள்ளுறை வகையால் தோழியை நெருங்கி வன்புறை

எதிரழிந்தவாறு கண்டு கொள்க. அல்லது உம் வந்து