பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை

' உடம்போ டுயிரிடை யென்ன மற் றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு (திருக்குறள் 1122) எனத் தலைமகன் கூற்ருகவும் கூறப்பெற்ற உவமைகளைத் திருவாதவூரடிகள் இதன்கண் ஒருங்கே இணைத்துக்

காட்டிய திறம் உணர்ந்து போற்றத்தக்கதாகும்.

பொருளில்லாதார் இம்மை மறுமை யென்னும் இருமை இன்பத்தினையும் அறியாதவராவர் ' எனக்கருதி நம் தலைவர் அருஞ்சுரம் போய்ப் பொருள்தேட நினைக்கின்ருர் எனத் தோழி தலைவிக்கு உரைப்பதாக அமைந்தது, வறியார் இருமை யறியார் என மன்னும் மாநிதிக்கு நெறியா ரருஞ்சுரம் செல்லலுற்ருர் நமர் ’

(திருக்கோவை 333) என்னுந்தொடராகும். இது,

ஈதலுந் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி ! (குறுந்தொகை 63) எனத் தலைமகன் பொருள்தேடக்கருதிய தன்னெஞ்சிற்குச் சொல்லியதாக வரும் தொடர்ப்பொருளை தோழி உட் கொண்டு கூறும் முறையில் அமைந்திருத்தல் காணலாம். இல்லோர்க்கு ஈதலும் துய்த்தலும் இல் ' என்னும் இத் தொடர்ப்பொருளை வறியார் இருமை யறியார் என ஒரு பழமொழியாகத் திருவாதவூரடிகள் அமைத்துள்ளமை நோக்கத்தக்கதாகும்.

தலைவன் பிரிய ஆற்ருளாகிய தலைவி, அவர் இப் பொழுது என்னைப் பிரிவாரல்லர் என்றெண்ணி அவரது பிரிவிற் சிறிதும் கருத்தின்றியிருந்தேன் ; அவரோ தமது பிரிவை யான் உணரின் சிறிதும் ஆற்றியிரேன் என் றெண்ணி அதனை எனக்குச் சொல்லுதலிற் கருத்தின்றிப் போயினர். எம்மிருவரது கருத்தின்மையும் ஒருங்கு சேர்ந்து என்னை இப்பொழுது வருத்துகின்றன எனக் கலக்க முற்றுரைப்பதாக அமைந்தது,

பிரியா ரெனவிகழ்ந்தேன் முன்னம்யான் பின்னை யெற்பிரியிற் றரியா ளெனவிகழ்ந்தார் மன்னர்தாந்தக்கன் வேள்வி மிக்க எரியா ரெழிலழிக்கும் மெழிலம் பலத்தோ னெவர்க்கும் அரியான் அருளிலர்போல் அன்னவென்னை யழிவித்தவே. (340) என்னும் திருக்கோவையாகும். இது,