பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 17

மென்பதில்லே. உதிர்ந்த பிட்டும் எனக்குப் பிடிக்கும்’ எனக் கூலியாளாய் வந்த இறைவன் கூறிஞன். அன்பிற் சிறந்த முதியவள் அவனே நோக்கி, ஐயா, வைகைக்கரை காக்கும் அதிகாரிகள் மிகவும் பொல்லாதவர்கள். யான் தரும் பிட்டினைத்தின்று விரைந்து சென்று எனக்கு அளந்த பங்கினைச் சோம்பலின்றி அடைப்பீராக என்று கூறித் தான் அப்பொழுது அவித்த பிட்டினே அன்புடன் கொடுத் தாள். கூலியாளாய் வந்த அவன் அப்பிட்டினை மடிநிறைய வாங்கிக் கட்டிக்கொண்டு வைகைக்கரையை அடைத்தான்.

இனியவை பெற்ருல் தனித்துண்ணுது பலர்க்கும் கொடுத்து உண்ணுதல் வேண்டும் என்ற முறைப்படி இறைவன் தான் பெற்ற சுவை நிறைந்த பிட்டினை வைகைக் கரையில் வேலை செய்யும் எனய கூலியாட்களுக்குங் கொடுத் துத் தானும் உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடினுள். தன்னிட முள்ள பிட்டுத் தீர்ந்தவுடன் புழுதிபடிந்த மேனியொடுபிட்டு வாணிச்சியாகிய முதியவளிடம் சென்று அன்னேயே, மண் சுமந்து இளேத்தேன். உனக்கு அளந்த கரையிற் பெரும் பகுதி அடைத்தாயிற்று. சொக்களுர் ஆணை என்ருன். அவ் அம்மையும் அவன் மொழியினை தம்பி மேலும் பிட்ட தினை நிறையக் கொடுத்தான். அவன் அதனைப்பெற்று முன் போலவே ஏனையோர்க்குங் கொடுத்துத் தானும் உண்டு கரையை யடைப்பவன் போல அங்குமிங்கும் திரிந்து சில இடங்களில் கரையினையும் உடைத்துவிட்டான், அந்நிலையில் கனக்கர்கள் அவ்விடம் வத்தனர். அவன் அவர்க்கு முன் சென்று என்னேயொப்பவர் ஒருவருமிலர் என்னை முதலா ளாகத் தெரிந்துகொள்ளுங்கள் எனக் கூறினுள். அங் குள்ள வேலையாளர் இவனுடைய குறைகளைச் சொல்லினர். எனினும் இவனுல் தமக்குத் தீங்குதேர்தலாகா தென்றஞ்சிய கணக்கர்கள் இவனேயே முதலாளாகக் குறித்துச் சென்ருர் கள். அவர்கள் போன பின் அவன், கூடையைத் தலைக்கண யாக வைத்துக் கால்மேல் காலை வைத்துப் படுத்திருந்தான். அங்கு நிகழும் வேலைகனே க் கண்காணிக்க அரசனுல் அனுப் பப்பட்ட பணியாளர் சிலர் அங்கு வந்து, மண் சுமவாது படுத்திருக்கும் இவன் யார் ? என வினவினர். அங்குள்ள ஆட்கள் இவன் பிட்டு வாணிச்சி ஆள் என்றனர். அது கேட்ட பணியாளர் கூலியனனாகிய இ -

அதிகாரியிடத்தில் உன்னை ஒப்பட்ை