பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

பன்னிரு திருமுறை வரலாறு


இதன் பொருளாகும். இதல்ை இறை ' என்ற பெயர் எங்கும் நீக்கமற நிறைந்த பொருளாகிய இறைவனையே குறிப்பதென்பதும், அப்பெயரால் அரசனைக் குறிப்பிடுதல் உபசார வழக்கென்பதும், இறைவனுக்குரிய முறை செய்தற் றன்மை உலகபாலருருவாய அரசன் வாயிலாக நிகழ்கின்ற தென்பதும் புலப்படுத்தப் பெற்றுள்ளமை அறியத்தக்க தாகும். தெய்வப் புலவர் அருளிய இத்திருக் குறட் கருத் தினை உளங்கொண்டே வாதவூரடிகளும், தில்லையா னருளால் விரிநீருலகங் காப்பான்பிரியக் கருதுகின்ருர் நமர் எனத் தலைவனது நாடுகாத்தற் பிரிவுக்கு இறைவனது ஏவ லாகிய திருவருட் குறிப்பினை ஏதுவாக்கிக் கூறினராதல் வேண்டும்.

மணமனை கண்டு வந்த செவிலி, தலைமகனது காதல் மிகுதியை நற்ருய்க்கு எடுத்துரைப்பதாக அமைந்தது,

பொட்டணியானுதல் போயிறும் பொய்போ லிடையெனப் இட்டணியான் தவிசின்மலரன்றி மிதிப்பக்கொடான் பூண் மட்டணிவார்குழல் வையான்மலர் வண்டுறுதலஞ்சிக் கட்டணிவார்சடை யோன் தில்லை போவிதன் காதலனே,

(திருக்கோவை-303) என்னும் திருப்பாடலாகும். ' தில்லையை ஒப்பாளாகிய தலைவியின் காதலன், பொய்போலும் இடை ஒடிந்துபோம் என்று கருதி அவளுக்கு அணிகலன்களைப் பூட்டியறியான் ; மெல்லடி நோகும் என்று அஞ்சி அவள் தவிசில் மிதிக்கும் பொழுதும் மலரின் மேலன்றி அடி வைக்க விடமாட்டான் ; வண்டுகள் பொருந்தி மொய்க்குமென்றஞ்சிக் கூந்தலின்கண் தேன் நிறைந்த மலர்களை வைத்து அணியமாட்டான்; இவை பற்றிச் சொல்லுகின்றதென்ன ? நுதலின் கண் மகளிர் இன்றியமையாது அணிதற்குரியதாகிய பொட்டையும் பொறையாம் என்று கருதி அணிதலைச் செய்யான் ' என் பது இதன் பொருளாகும். இதன் கண் பொட்டணியான்........ பூண் இட்டணியான் எனவரும் தொடர்கள்,

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (திருக்குறள் 11.15) என நலம்புனைந்துரைக்கும் தலைமகன் கூற்றிற் பயின்ற பொருளையுட் கொண்டு, அத்தகைய தலைவைெருவனது காதல் மிகுதியைப் புனைந்துரைக்கும் முறையில் அமைந் துள்ளமை காணலாம்.